செய்திகள் :

"அதை உங்க அப்பாவிடம்தான் கேட்கணும், அவரை இங்க காணோம்..!"- ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ்மாக் தொடர்பான விவாதத்தின்போது, ``717 கடைகளை முழுமையாக மூடிவிட்டோம். எந்தெந்த கடைகளை மூடினோம் என்பதை கடை எண்களோடு தெரியப்படுத்தியிருக்கிறோம்.

மக்களுக்கு இடையூறான கடைகளை கடை எண்ணோடு புகார் கொடுத்தால், உடனடியாக அந்தக் கடையை இடமாற்றம் செய்வோம்.

அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்

ஆன்லைனில் மது விற்பனை செய்யவில்லை. பணமில்லா பரிவர்த்தனைக்காக மட்டுமே ஆன்லைன் முறை கொண்டு வரப்படுகிறது.

ஆன்லைனில் மது விற்பனை என்பது தவறான கருத்து" என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

அதற்கு பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ் குமார், "மதுவை ஒரு வருமானமாக பார்க்கக் கூடாது. மதுவை அரசே ஊக்குவிக்கக் கூடாது. மதுவினால் வருகிற வருமானத்தை பெருக்குகிறோம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. ஓர் அரசு மதுவை ஒழிக்கும் முயற்சியிலேயே ஈடுபட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ் , "கடந்த ஆட்சியில் இந்தியா முழுவதும் மதுவை தடை செய்தால்தான் தமிழகத்திலும் தடை செய்ய முடியும் என்றனர். நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்" என்று கூறினார்.

தவிர, "எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகங்களுக்கே தெரியவில்லை. மதுவை நீங்கள் எப்படி குறைக்கப் போகிறீர்கள்? ஆண்டுக்கு இத்தனை கடைகளை மூடலாம் என எதுவும் திட்டம் இருக்கிறதா?

நேரு பிரதமராக இருந்த போது மதுக்கடைகளை மூட எல்லா மாநிலத்துக்கும் ஒரு கமிட்டியை அனுப்பினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் 'கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது' என்றனர். அதை இங்கே பதிவு செய்கிறேன். அமைச்சர் விக்னேஷ் சிறு வயதாக இருந்தாலும் நன்றாகப் பேசுகிறார். ஆனால், போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்" என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசினார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

"டாஸ்மாக்கில் என்னென்ன ஊழல் நடந்தது... யார் யாருக்கு 'Party Fund' சென்றது என விரிவாக அறிக்கை தயார் செய்து அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது. ஆனால், அப்போதைய அரசு அதை வைத்து வழக்குப் பதிவு செய்யவில்லை" என்று அமைச்சர் அருண்ராஜ் கூற எதிர்க்கட்சியினர் லாட்டரி... லாட்டரி என கோஷமிட்டனர்.

உடனே, ``லாட்டரி கம்பெனியிடம் நீங்கள் ஏன் 900 கோடி ரூபாய் வாங்கினீர்கள்?" என்று ஆதவ் கேட்க, "900 கோடி ரூபாய் கொடுத்தது ஆதவ்வின் மாமாதான். நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்" என்று உதயநிதி பதில் அளித்தார்.

அதற்கு, "அதை உங்க அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் தான் பணம் வாங்கியிருக்கிறார். உங்கள் அப்பாவை இங்கு காணவில்லை" என்று ஆதவ் கூற, தவெக-வினர் கைதட்டினர். எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.

சிப் தயாரிக்க உதவும் Polysilicon-க்கு வரி விதிக்கும் அமெரிக்கா; சீனாவிற்கு நெருக்கடி?

உலக அளவில் பாலிசிலிகான் சந்தையில் சீனாவிற்கு என்று தனி இடம் உண்டு. செமி கண்டக்டர்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பில் பாலிசிலிகான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு செக் வைப்பது போல, அமெரிக்கா பு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம்

மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு முக்கிய ஆதரமாக விளங்குகிறது. மயிலாடுதுறை ரயில் சந்திப்பினை அதிநவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ரயில... மேலும் பார்க்க

"ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றியது உங்கள் தலைவர்தான்"- ரகுபதிக்கு மரிய வில்சன் பதிலடி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே... மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், ... மேலும் பார்க்க

``என் அனுமதியின்றியே பாஜக தலைவர்கள் என் புகைப்படத்தை வெளியிட்டார்கள்" - சோனம் வான்சுக்

மத்திய அரசைக் கண்டித்து சிஜேபி முன்னெடுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு... மேலும் பார்க்க

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஈரான் ... மேலும் பார்க்க

2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினர்களா... மேலும் பார்க்க