'விபி ஜிராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம்..!' - பிரதமர் மோடிக்கு விஜய் க...
`மூன்று முக்கிய முடிவுகள்' - தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? - மாணிக்கம் தாகூர் விளக்கம்
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், "நல்ல தொடக்கமாகவே தவெக ஆலோசனைக் கூட்டம் அமைந்துள்ளது. குறைந்தபட்ச செயல்திறன் பற்றி பேசினோம்.

ஆலோசனைக் கூட்டம் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டோம். மிகவும் நேர்மறையாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் பெயர் சூட்டுதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" என்றிருக்கிறார்.
தொடர்ந்து தவெக 'இந்தியா' கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, "யார் யார் எம்.பி-க்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். தவெகவிற்கு எப்போது எம்.பி-க்கள் வருகிறார்களோ அப்போது இந்தியா கூட்டணி பற்றி பேசுவோம் " என்று பதிலளித்திருக்கிறார்.












