செய்திகள் :

`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' - முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

post image

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது தமிழக அரசியல் களத்தில் சலசலப்புகளை உண்டாக்கி விட்டிருக்கிறது.

திமுக, அதிமுக ஆகிய எதிர்க் கட்சிகளுடன் தவெக அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுமே இந்த நியமனத்தை ஏற்கவில்லை.

ஆனால், தன் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பன்டிட் வெற்றிவேலை அரசியல் ஆலோசகராக நியமித்து விட்டு எதிர்ப்பு வந்த பின், அந்த நியமனத்தை ரத்து செய்தது போல் இந்ந முறை விஜய் பின்வாங்க மாட்டார் என்கிற பேச்சுகள் கோட்டை வட்டாரத்தில் கேட்கின்றன.

இந்தச் சூழலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் வேலை என்ன, அவருக்கு சிறப்பு அதிகாரமென எதுவும் உண்டா என்பன போன்ற கேள்விகளுடன் அதிமுக ஆட்சிக் காலத்தில் `இதே' பதவியிலிருந்த தளவாய் சுந்தரத்திடம் பேசினோம்.

தளவாய் சுந்தரம் மேடையில்

''இந்தப் பதவிக்கு யாரை நியமிக்கணும்கிறது தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை மற்றும் அதிகாரம். தனக்கு ரொம்பவும் நம்பிக்கையான நபர்களையே நியமிப்பார் முதல்வர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தொடர்பு, தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதுதான் இந்த அலுவலகத்தின் முக்கியமான பணி.

டெல்லியில் தனி அலுவலகம் இருக்கும். அதிகாரிகள், ஊழியர்கள் இருப்பாங்க. அதிகார மட்டத்துல ஆணையர்ங்கிறவர் பொறுப்பு அதிகாரி.

அரசியலமைப்பு சார்ந்த பதவிதான் 'தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி'னு அழைக்கப்படுது. நான் இந்தப் பதவியில இருந்தப்ப கொஞ்ச நாள் முன்னாடி இங்க தலைமைச் செயலாளரா இருந்த முருகானந்தம் அங்க ஆணையரா இருந்தார்.

முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோ டெல்லி வந்தா, அங்க அவங்களுடைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கறது, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வேண்டி இருந்தா அதற்கான ஏற்பாடுகளைச் செய்யறது, மாநில அரசின் கோரிக்கைகள் மத்திய அமைச்சகங்களிடம் இருந்தால் அதை ஃபாலோ செய்து தீர்வு காண்பதுன்னு பணிகள் இருக்கும்.

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இந்த பங்களாவுல தனி அறைகள் இருக்கும். மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் எங்காவது வெளிநாடுகளில் சிக்கல்களைச் சந்தித்தால் சமப்ந்தப்பட்ட நாட்டின் தூதரகங்கள் மூலம் பேசி அவற்றிற்கு தீர்வு காண்பதும் சிறப்பு பிரதிநிதியோட வேலைதான்.

நான் இருந்தப்ப அந்த மாதிரி பாதிக்கப்பட்ட நிறையப் பேரை மீட்டு வந்திருக்கேன்.

பொதுவா கட்சியில சீனியரான ஆட்கள், டெல்லியை நன்கு அறிந்தவர்கள், டெல்லி அரசியல்வாதிகளூடன் நல்ல தொடர்பை பேணி வருகிறவற்காளாப் பார்த்துதான் நியமிப்பாங்க.

மாநிலத்தில் தீவிர அரசியலில் இயங்கிட்டிருக்கிறவங்க பெரும்பாலும் இந்தப் பதவிக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

டெல்லி

சிறப்பு பிரதிநிதிக்கு மாநில அமைச்சருடைய அந்தஸ்து உண்டு. சைரன் வச்ச கார், தேசிய கொடினு அந்த புரொட்டா கால் இருக்கும். சம்பளம் நான் இருந்த வரைக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாயா இருந்தது. அதுக்குப் பிறகு உயர்த்தினாங்களா தெரியாது. வீடு, சாப்பாடு, இலவச விமானப் பயணம்னு சில சலுகைகள் இருக்கு.

அதேநேரம் மத்தியில் ஆளுகிற கட்சிக்கும் மாநிலத்துல ஆளும் கட்சிக்கும் இடையில் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தா சிறப்பு பிரதிநிதியின் வேலையும் சுமூகமா போகும். அப்படி இல்லாதபட்சத்துல ஏதோ போகுதுனு சொல்வாங்க இல்லையா, அதுதான் நடக்கும்'' என்கிற தளவாய் சுந்தரம், தான் பதவி வகித்த அந்தக் காலங்களில் தன் சம்பளமான அந்த பத்தாயிரத்தையும் வாங்கவில்லையாம்.!

`நீங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம்' - இபிஎஸ்-ஸுக்கு வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கடிதம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி தங்களுக்கு வேண்டாம் என்று எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதில், `2026-ல் நடந்... மேலும் பார்க்க

`தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகள் லாபம்தான் அரசுக்கு முக்கியமா?'- சீமான் சாடல்

`அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல்: 'Open War' ஆக மாறுமா? என்ன பிரச்னை? |Full Summary

இந்தியாவின் எல்லை நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். இப்போது இந்த இரண்டு நாடுகளும் முட்டி, மோதிக்கொண்டிருக்கின்றன.இந்த மோதல் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானால் முதன்முதலில் தொடங்கப்பட்டத... மேலும் பார்க்க

`தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியா?' - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜா-வை தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் தற்போது வரை ... மேலும் பார்க்க

'லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் அளிக்கலாம்..!' - பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ்

கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், தன்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப... மேலும் பார்க்க

"அதிமுக என் உயிருக்கும் மேலானது; ஆனால்..." - கட்சியிலிருந்து விலகிய MSM ஆன்ந்தன் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். த.வெ.க- வில் இணையும் வாய்ப்பு அதிகம் என்கிற தகவல்கள் வெளியாகி... மேலும் பார்க்க