Vijay இதைச் செய்யலைன்னா, சவால்களை பட்டியலிடும் Journalist Shabbir Interview
மேற்கு வங்க தலையெழுத்தை மாற்றிய SIR; வெறும் 12 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மம்தா அரசு தோல்வி
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 206 தொகுதியில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 81 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.கவை எதிர்த்து மம்தா பானர்ஜியும் தன்னால் முடிந்த அளவுக்குப் போராடினார். தேர்தலில் மம்தா பானர்ஜி பாபானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க மூத்த தலைவர் சுவந்து அதிகாரி போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் மம்தா பானர்ஜியே முன்னிலையில் இருந்தார். 7வது சுற்று எண்ணப்பட்டபோது 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த மம்தா பானர்ஜியின் வாக்கு அடுத்த சுற்றுக்களில் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

14வது சுற்றில் வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த மம்தா பானர்ஜி அதன் பிறகு சுகந்து அதிகாரியை விட பின் தங்க ஆரம்பித்தார்.
இறுதியில் 15,105 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். 2021ம் ஆண்டு தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி இப்போது தனது சொந்த கோட்டையாகக் கருதப்படும் பாபானிபூர் தொகுதியிலும் சுவந்து அதிகாரியிடம் தோல்வியைச் சந்தித்து இருக்கிறார்.
இத்தொகுதி பல ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்தது. அதோடு இது மம்தா பானர்ஜியின் கெளரவப் பிரச்னையாகவும் இருந்தது.
12 லட்சம் வாக்கு வித்தியாசம்
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட வெறும் 4 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறது. அதிகமான தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றிபெற்று இருக்கிறது.
பா.ஜ.க 1.39 கோடி வாக்குகளைப் பெற்று இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 1.26 கோடி வாக்குகள் பெற்று இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 12 முதல் 13 லட்சம் மட்டும்தான். மிகவும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க 85 முதல் 100 தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது.
வெறும் 4 சதவீத வாக்கு வித்தியாசமானது இத்தகைய பிரமாண்டமான அரசியல் விளைவை ஏற்படுத்துவது மிக அரிதான ஒன்றாகும். எனவே, இயல்பாகவே உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இத்தேர்தல் மம்தா பானர்ஜி மீதான ஒரு நேரடியான பொதுவாக்கெடுப்பாக அமைவதற்கு மாறாக, உண்மையில் யார் வாக்களிக்கும் வாய்ப்பைப் யார் பெற்றார்கள், யார் பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முடிவை மாற்றிய SIR
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல்பாட்டில், சுமார் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இவர்களில், சுமார் 27 லட்சம் பேர் தங்களது வாக்குரிமைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
வெறும் 12-13 லட்சம் என்ற இறுதி வாக்கு வித்தியாசத்துடன் ஒப்பிடும்போது, நீக்கப்பட்ட வாக்காளர்களின் அளவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நீக்கப்பட்ட அந்த வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினர் மம்தா பானர்ஜிக்கு வாக்களித்திருந்தால் கூட, தொகுதி அளவிலான முடிவுகளில் அதன் தாக்கம் வித்தியாசமாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கும்.
2021-ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் கட்சி, பாஜக-வை விட சுமார் 60 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்தது. வாக்கு சதவீதத்தில் சுமார் 10 சதவீதம் இடைவெளி இருந்ததுடன், இது 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காணப்பட்டது. ஆனால் இப்போது நடந்துள்ள தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்து, வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
















