Mrunal Thakur: "பச்சை நிறமே பச்சை நிறமே" - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல...
``ருதுராஜ்க்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது முட்டாள் தனம்'' - இந்திய அணி தேர்வு குறித்து அஷ்வின்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ. 30) ராஞ்சியில் நடைபெற்றது.
ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரியில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அஷ்வின், "இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அது நிர்வாகம் எடுக்கும் ஒரு முட்டாள்தனமான முடிவு.
ஏனெனில் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். அப்படி வாய்ப்பு கொடுத்தாலே, அவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்த அது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
அதை விடுத்து திலக் வர்மாவை சேர்க்கச் சொல்வதெல்லாம் சரியான விஷயமாக எனக்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாத அணியில் நிதிஷ் குமாரை ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது.
இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், அணியை தேர்வு செய்வதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்குத் தான் அர்த்தம். ஏன் அவரை தேர்வு செய்யவில்லை?

ஹர்திக் செய்யும் அதே விஷயத்தை நிதிஷ் குமாராலும் செய்ய முடியும். அவருக்கு தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கினால்தான், அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்கவும் முடியும், வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், நாம் இத்தகைய தொடருக்கு எந்த மாதிரி அணியை தேர்வு செய்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்," என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.




.jpg)















