செய்திகள் :

'ரூ.2,500-க்கு வீட்டு வேலை டு மேற்கு வங்க எம்எல்ஏ' - பாஜக வேட்பாளர் கலிதா மாஜியின் வெற்றிக் கதை

post image

மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றுள்ள மெகா வெற்றியில், 'சைலண்ட்' ஆக ஒரு சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. கலிதா மாஜியின் வெற்றி இப்போதைய டாக் ஆஃப் தி நேஷன்!

யார் இந்த கலிதா மாஜி?

மேற்கு வங்கத்தின் அவுஸ்கிராம் தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கும் கலிதா மாஜி, வறுமை துரத்தினாலும், உழைப்பைக் கைவிடாமல், வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே தன் அரசியல் கனவுகளையும் நனவாக்கியிருக்கிறார்.

வெறும் 2,500 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த அந்தப் பயணம், இன்று எம்.எல்.ஏ சீட் வரை வந்து நிற்கிறது.

வேட்பு மனு தாக்கலின் போது கலிதா மாஜி
வேட்பு மனு தாக்கலின் போது கலிதா மாஜி

தோல்வி தந்த பாடம்!

கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் கலிதா.

ஆனாலும் சோர்ந்து விடாமல், வீட்டு வேலை செய்துகொண்டே தன் தொகுதி மக்களுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதனால், இந்த முறை சுமார் 1,07,692 வாக்குகள் பெற்று, திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் ஷியாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, சட்டசபைக்குள் நுழையப்போகிறார் இவர்.

'வீட்டு அடுப்பங்கரையில் வேலை பார்த்த கலிதா மாஜி, இனி சட்டசபையில் அமர்ந்து மக்களுக்காகப் பேசப்போகிறார்' என்பதே இந்த ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த வெற்றி.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க