செய்திகள் :

`வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை' - வாபஸ் பெற்ற ராமதாஸ்; பதவியை உறுதி செய்யும் அன்புமணி!

post image

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகவே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அதைத் தொடர்ந்து ``கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்க வேண்டும், பா.ம.க-வின் பெயர், கொடி மற்றும் 'மாம்பழம்' சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், கட்சிக்குள்ளேயே நீடித்து வந்த தலைமைப் போட்டி தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலை இரு பிரிவாக எதிர்கொண்ட பா.ம.க-வில் அன்புமணி தரப்பு பா.ம.க-வில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றனர்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

இந்த சூழலில், ராமதாஸ் திருமண நாளில் அவரின் இல்லத்துக்குச் சென்ற அன்புமணி ராமதாஸுடன் பேசி மீண்டும் இணக்கமான சூழலை உருவாக்கினார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை. எனவே மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைத்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற வழக்கையும் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளதால், அன்புமணி ராமதாஸே பா.ம.க.வின் அதிகாரபூர்வத் தலைவர் என்பது முற்றிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

`தவெக அரசுக்குக் காலம் தர வேண்டும்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவதும் என்றாலும் அது ஒரு தனி மகிழ்... மேலும் பார்க்க

TVK-வில் இணைந்த 6 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மீது `உரிய' நடவடிக்கை! சபாநாயகர் உறுதி அளித்ததாரா?

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவ... மேலும் பார்க்க

`பட்டமளிப்பு விழா, Calligraphy பயிற்சி டு ஏசி வகுப்பறைகள்' - அசத்தும் பொய்யாமணி அரசுப் பள்ளி

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யாமணி கிராமத்தில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இப்பள்ளியில், 240 மாணவர்கள் பயின்று வருகின்றனர்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளற்ற குன்னவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி; 15 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம், 9-ஏ நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னவயல் கிராமத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்... மேலும் பார்க்க

மணமேல்குடி: `உடனே என்னன்னு பாருங்க'- உத்தரவிட்ட ஆட்சியர், அமைச்சர்; சுடுகாட்டுப் பிரச்னைக்கு தீர்வு!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் சாயும் சரத் பவார்? - மகளுடன் சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சமீப காலமாக நாடாளுமன்றத்தில் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதற்காக மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்களின் ஆதரவை பெறும் ம... மேலும் பார்க்க