செய்திகள் :

விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா? - கிரிஷ் சோடங்கர் அளித்த பதில்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

த.வெ.க தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

இருப்பினும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கிரிஷ் சோடங்கர்
கிரிஷ் சோடங்கர்

இந்நிலையில் ஆட்சியில் சேர விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழக தேர்தல் நிலவரம் குறித்து கார்கே, ராகுலிடம் அறிக்கை அளித்துள்ளேன்.

பெண்கள், இளைஞர்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க