செய்திகள் :

``விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்திருந்தால் வீணாகி இருக்காது'' - எடப்பாடி பழனிசாமி

post image

நிரந்தர டிஜிபி

சேலம் ஓமலூர் கமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

"அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில், டிஜிபி நியமனத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை என்ன காரணம்? என்று அரசிடம் கேள்வி எழுப்பினேன்.

டிஜிபி நியமனம் செய்யவேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக பட்டியல் தயார் செய்ய வேண்டும். மத்திய தேர்வாணையத்திற்கு அனுப்பி அவர்கள் முடிவு செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு தமிழகத்தில் பணியாற்றக்கூடிய டிஜிபி பட்டியலைத் தயாரித்து மத்திய தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றம் 3 வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது.

தகுதியான பணியாற்றக்கூடிய டிஜிபியை பட்டியலைத் தேர்வு செய்து மாநில அரசுதான் அனுப்பியுள்ளது. மூன்று பேரும் திமுகவுக்குச் சாதகமாக இருக்க மாட்டார்கள் என்பதனால்தான், நிரந்தரமான டிஜிபி இதுவரை தேர்வு செய்யாமல் உள்ளார்கள் என்று கூறினார்.

விவசாயிகளுக்கு துரோகம்

திமுக அரசு மெத்தனப்போக்காக நடந்து கொண்ட நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தை பொம்மை முதலமைச்சர் ஆண்டு கொண்டு இருக்கிறார்.

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த உடன் கொள்முதல் செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. நெல்லும் மழையில் நனைந்து இருக்காது.

திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இல்லாவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்; யாரிடமும் கெஞ்சும் நிலை இருந்திருக்காது.

தேவையான அளவிற்கு எடை போடுவதற்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. போதிய அளவிற்கு லாரிகள் பணியில் அமர்த்தப்படவில்லை. லாரிகளுக்கு டீசல் அடிப்பதற்கு கூட பணம் வழங்கப்படவில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

15 நாள்கள் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் மழை நனைந்து வீணாகி இருக்காது. விவசாயிகளும் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். பாதிக்கப்பட்டதற்கான தமிழக அரசின் அலட்சியம் முக்கிய காரணம்.

முறையாக தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு பயிர்கள் வீணாகியது. பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு செய்யவில்லை. விவசாயிகளை நேரடியாக சென்று பார்க்க முடியாதா? பயிர்களை எடுத்து வந்து காட்டுகிறார்கள் அதை எடுத்துப் பார்க்கிறார்.

நெல் பயிர் என்று சொன்னால்தான் முதலமைச்சருக்கு தெரியும் இல்லாவிட்டால் தெரியாது அப்படிப்பட்ட முதல்வர்தான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஒரே கட்சி திமுக தான்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளோம்.

இயற்கை சீற்றத்தில் எப்பொழுது எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்களோ, நேரடியாக சென்று விவசாயிகளை சந்தித்து வறட்சியிலும், வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசுதான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சருக்கு வேளாண் திட்டம் என்றால் தெரியாது. மூன்று வேளாண் சட்டம் என்னவென்று முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம்.

நான் தமிழக விவசாயிகள் இங்கு பாதிக்கப்படுவதை மட்டும் தான் நான் சொல்ல முடியும். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரச்னைகள் உள்ளது.

விவசாயத்தைப் பற்றி அக்கு வேறு, ஆணிவேராக தெரியும். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறேன். அனுபவ ரீதியாகவே விவசாயத்தை பற்றி நிறைய தெரியும்.

யார் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்" என்றார்.

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, "ஓபிஎஸ் விவகாரம் காலம் கடந்து முடிந்து விட்டது" என்றவர், தொடர்ந்து பேசுகையில்,

"எஸ்ஐஆர் பணி நடந்துவிட்டால் இறந்தவர்கள் பட்டியல், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டு விடும். இவை எல்லாம் இருந்தால் தான் இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து வாக்களிக்க வைப்பார்கள்.

அது திமுகவிற்கு கைவந்த கலை அதற்காக தான் எஸ்.ஐ.ஆர் வரக்கூடாது என்று திமுகவினர் துடிக்கிறார்கள். திமுக அரசு பி.எல்.ஓக்களை வைத்து முறைகேடுகள் செய்கிறது.

முறைகேடுகளும் களையப்பட வேண்டும் நேர்மையான முறையில், உண்மையான வாக்காளர் பட்டியல் வாக்காளர்கள் இடம்பெற வேண்டும்." என்றார்.

தவெக: பிரசாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை - காரணம் என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையி... மேலும் பார்க்க

‘‘பங்கைப் பிரி... பங்கைப் பிரி...’’ - கூட்டணிப் பேச்சுவார்த்தை பஞ்சாயத்து!

‘50 தொகுதி லட்சியம்... 40 தொகுதி நிச்சயம்’ - கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது நம் அரசியல்வாதிகள் சொல்லும் `பங்கைப் பிரி’ தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கை இது! சிறிய, பெரிய கட்சிகள் பிரச்னையில்லாமல் பங்கு... மேலும் பார்க்க

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - கொடியசைத்து துவக்கிய பிரேமலதா விஜயகாந்த் | Photo Album

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த்``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்த... மேலும் பார்க்க

``தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரைப் போல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்'' - நயினார் நாகேந்திரன்

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற தலைப்பில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் அவர் மக்களை சந்தித்தார்... மேலும் பார்க்க

``தேச-தெய்வீக பக்தன் எடப்பாடி பாஜக-வுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு?'' - ராஜேந்திர பாலாஜி

`விஜய பிரபாகரன் தோல்விக்கு காரணம்'விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க வாக்குச் சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலா... மேலும் பார்க்க

``வாக்குறுதியை முதல்வர் ஏமாற்றிவிட்டார்; மக்கள் என்னை திட்டுகிறார்கள்” - தென்காசி எம்.எல்.ஏ ஆதங்கம்

தென்காசி மாவட்டத்தில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க சார்பில் கட... மேலும் பார்க்க