செய்திகள் :

வைக்கோலுக்குள் ரூ.3.25 கோடி; காட்டிக்கொடுத்த மைத்துனர்; ம.பி., கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தானிய வியாபாரி சுரேஷ் பார்மர் என்பவருக்குச் சொந்தமான ரூ.3.75 கோடியைக் கடந்த 18ம் தேதி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வியாபாரியின் ஊழியர் வாகனத்தில் ரூ.3.75 கோடியை எடுத்து சென்றபோது அவரது வாகனத்தை வழிமறித்து அவரை கத்தியால் குத்திவிட்டு அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இக்கொள்ளை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் பணத்தைக் கொள்ளையடித்த முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

ஆனால் அவனிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இல்லை. இக்கொள்ளையில் பக்கத்து மாநிலமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியின் மத்தியப் பிரதேச கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே நாக்பூர் போலீஸார் மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றனர்.

வாரசியோனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோர்லி கிராமத்தில், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அக்கிராமத்திற்கு நாக்பூர் தனிப்படை போலீஸ் சென்றது. முக்கியக் குற்றவாளியின் மைத்துனர் அர்விந்த் என்பவரிடம் உள்ளூர் போலீஸாரின் துணையோடு நாக்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதலில் அர்விந்தின் தந்தையிடம் பேசிய போலீஸார், பின்னர் அர்விந்த்திடம் விசாரித்ததில், பணத்தை தோட்டத்தில் மறைத்து வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே தோட்டத்திற்குச் சென்று தேட ஆரம்பித்தனர். அங்கு இருந்த வைக்கோலுக்குள் 3 சாக்கு மூட்டையில் பணம் வைக்கப்பட்டு இருந்தது.

மூன்று சாக்குமூட்டைகளும் பின்னர் அங்குள்ள பஞ்சாயத்து கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு போலீஸார் சுமார் நான்கு மணி நேரம் ரூபாய் நோட்டுகளை எண்ணினர். அதில் ரூ.3.25 கோடி இருந்தது. இந்த நடவடிக்கையின் போது ஏராளமான கிராம மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர். இக்கொள்ளை தொடர்பாக போலீஸார் சந்திரகாந்த், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.

இக்கொள்ளையில் தொடர்புடைய மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் சில நாட்களாக சுரேஷ் வீட்டிற்கு பணம் வருவது குறித்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் உதவி செய்து இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனம் ரயில் நிலையம் ஒன்றிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

Nvidia: களமிறங்கிய வெள்ளை மாளிகை; அமெரிக்க நலனா... ட்ரம்ப் நலனா? Jensen Huang Come Back பின்னணி

"ஒரு CEO-வை நாட்டின் அதிபரே போன் போட்டு மீண்டும் பதவியில் உட்கார வைக்க முடியுமா? அதுவும் சீன உளவாளி சர்ச்சையில் சிக்கிய பிறகு? அதைத்தான் செய்திருக்கிறார் ட்ரம்ப். ஆனால் அந்த அதிபருக்கே என்விடியாவில் க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: "புகாரே வரலன்னு சொன்னீங்களே, 116 நாளா என்ன செஞ்சீங்க?" - வெடிக்கும் அரசியல் கட்சிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், 'இதுநாள்வரை எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த முதல்வர், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாயவேண்டும்; சி.பி.ஐ விசார... மேலும் பார்க்க

``கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.!" - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் தேர்தல்: "5.2 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம்" - பாஜக அரசு அறிவிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாநில அரசு 10 ஆயிரம் நிதியுதவி திட்டத்தை அறிவித்தது. இதே போன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெண்களுக்கு மாத அடிப்படையில் அதி... மேலும் பார்க்க

டிரைவராக கணவர், கண்டக்டராக மனைவி, பயணிகளாக குழந்தைகள்; வறுமையில் போராடும் கேரளக் குடும்பம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல்லைச் சேர்ந்தவர் மனு. இவர் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் டாரஸ் லாரி ஓட்டுநராக இருந்தபோது, தீபிகா என்ற ... மேலும் பார்க்க