செய்திகள் :

ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா!

post image

சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை-லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா - 2025 அதன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்களின் தலைமையில், டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தலைவர் திரு.A.C.S.அருண்குமார் அவர்களின் முன்னிலையில் 11.12.2025, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

முதலாம் ஆண்டு விழா
முதலாம் ஆண்டு விழா

இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் அவர்கள் லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் ஒரு வருட சேவையையும், வெற்றியையும் பாராட்டி, குறைந்த செலவில், நிறைவான சிகிச்சை வழங்குவதாகவும், கருவுறுதல் மையத்தின் மருத்துவர்களையும் மற்றும் ஊழியர்களையும் பாராட்டி பேசினார்.

இந்த விழாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபரும், நடிகையுமான திருமதி.தேவயானி ராஜகுமாரன் மற்றும் தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு.ராஜகுமாரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் கடந்த ஒரு வருட பயணத்தில் பெற்றோராகும் கனவுகளுடன் சிகிச்சை பெற வந்த தம்பதியினருக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்களை கொண்டு, அதிநவீன வசதிகளுடன், குறைந்த விலையில் அதி நவீன சிகிச்சை பெற்று உயர் வெற்றி விகிதங்கள், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெற்றதாக குறிப்பிட்டு, லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

முதலாம் ஆண்டு விழா
முதலாம் ஆண்டு விழா

மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழக நிர்வாக அறங்காவலர் திருமதி.S.லலிதாலட்சுமி அவர்கள், ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி செயலாளர் திரு.A.ரவிக்குமார் அவர்கள், பென்ஸ்ஸீ நிர்வாக குழு இயக்குனர் திருமதி.நிர்மலா அருண்குமார் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் டாக்டர். C.B.பழனிவேலு அவர்கள், சிறப்பு அலுவலர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி திரு.A.ஞானசேகரன் அவர்கள், டீன். டாக்டர். T.பாலசுப்ரமணியன் அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.J.கிருஷ்ணமோகன் அவர்கள், கல்லூரி முதல்வர் டாக்டர்.K.M.ஸ்ருதி அவர்கள், லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் இணை இயக்குனர் டாக்டர்.சரண்யா ஹேமந்த் அவர்கள் மற்றும் இணை பதிவாளர் டாக்டர்.S.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் லலிதாம்பிகை கருவறுதல் மையத்தின் ஒரு வருட சாதனையை ஆண்டு மலராக வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர்.

முதலாம் ஆண்டு விழா
முதலாம் ஆண்டு விழா

திருநெல்வேலி: பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்! | Album

திருநெல்வேலி: மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்.! மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: ``ஏழை மாணவியின் வெற்றிக்கு இது ஒரு சிறுபுள்ளி'' - நெகிழ வைத்த சேர்மன் சண்முகப்பிரியா

பட்டுக்கோட்டை நகரப்பகுதியை சேர்ந்த இருதயராஜ் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஷீலாராணி. இவர்களுக்கு ஒரு மகனும், பிரின்சியா என்ற மகளும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்ட குடும்பம்.பிரின்சியாவுக... மேலும் பார்க்க

புத்தகத்தை விட மீன் வலை நெருக்கமானது ஏன்? - மெரினா மணலில் முடிக்காத வீட்டுப் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!

விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த நவம்பர் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. தட்சசீ... மேலும் பார்க்க