செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: கண்மாயில் கவிழ்ந்த வேன்; பட்டாசு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான், கோடாங்கிபட்டி, ஏ. ராமலிங்காபுரம் பகுதிகளில் இருந்து தனியார் பட்டாசுத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு வேன் புறப்பட்டது.

வழக்கம்போல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை நோக்கிச் சென்ற அந்த வேன், அச்சம்தவிழ்தான் பெரிய குளம் கண்மாய்க் கரையில் செல்லும் போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவமனையில் சிகிச்சை

இந்த பயங்கர விபத்தில் சென்னாக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பெண் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர்கள் ஆவர்.

விபத்து நடந்ததும், அருகில் இருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக விபத்து இடத்துக்கு விரைந்து வந்து, கண்மாயில் கவிழ்ந்த வேனில் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த விக்கியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட 108 ஆம்புலன்ஸ்
மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட 108 ஆம்புலன்ஸ்

காயமடைந்த ஏழு பேருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலருக்கு தலை, கை, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

தேவைப்பட்டால் சிலரை அருகில் உள்ள மதுரை அல்லது விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற... மேலும் பார்க்க

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' - நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

கும்பகோணம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து இளம் பெண் பலி; பெற்றோர் உட்பட மூவர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல்(56). கூலி தொழிலாளர். இவரது மனைவி சீதா (45). இவர்களின் மகள்கள் கனிமொழி (21) பி.பி.ஏ., பட்டதாரி. ரேணுகா (2... மேலும் பார்க்க

கூடலூர்: 4 மாத தேடல்; 40-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; வனத்துறை கூண்டுக்குள் சிக்கிய ஆண் புலி

உலக அளவில் வங்கப் புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் வனப்பகுதிகளில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. காடு போதாமை, நீர்நிலை ஆக்கிரமிப்பு, தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களின் இடையூறு உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

முதுமலை: 20 அடியில் கூண்டு, 24 மணிநேரமும் சுழலும் கேமரா - புலி தாக்கிய‌ சம்பவத்தால் வனத்துறை உஷார்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டலமான மாவனல்லா பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி பெண் நாகியம்மாளை கடந்த 24 - ம் தேதி மதியம் புலி தாக்கியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த... மேலும் பார்க்க