செய்திகள் :

`அகழியையே வழித்தடமாக மாற்றிக்கொண்ட வைரல் யானைகள், குழப்பத்தில் வனத்துறை!' என்ன நடக்கிறது கூடலூரில்?

post image

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின்‌ கூடலூர். அதேவேளையில் நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் துண்டாடப்பட்டுள்ளன.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக யானைகள் இடம்பெயர முடியாமல் திணறி வருகின்றன. சில தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் யானைகளின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

அகழியை வழித்தடமாக பயன்படுத்தும் யானைகள்

மனித தவறுகளால் யானைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. கூடலூர் வனக்கோட்டத்தில் யானை - மனித எதிர்கொள்ளல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள அகழிகளையே இரண்டு யானைகள் வழித்தடமாக பயன்படுத்தி வரும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வனத்துறையினர், " யானைகளால் அகலமான பள்ளங்களை தாண்ட முடியாது என்பதால் அவற்றின் நடமாட்டத்தை தடுக்க அகழிகள் மட்டும் தான் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. கூடலூர் அருகில் உள்ள பிதர்க்காடு சுற்றுவட்டாரப் ஜோடியாக நடமாடி வரும் இரண்டு யானைகள் அகழிக்குள் இறங்கி நீண்ட தூரம் அதன் வழியாகவே

அகழியை வழித்தடமாக பயன்படுத்தும் யானைகள்

இடையூறு இல்லாமல் பயணித்து ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை உண்கின்றன. மீண்டும் அந்த வழியாக வனத்திற்குள் செல்கின்றன. தடுக்க அமைக்கப்பட்ட அகழியை வழித்தடமாக மாற்றிக்கொண்ட இந்த வைரல் யானைகளால் என்ன செய்வதென்று அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கிறார். அகழியை முழுமையாக பார்வையிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.

பசிபிக் பெருங்கடலில் உருவான சூப்பர் எல் நினோ... நவம்பரில் வரலாறு காணாத அளவில் தீவிரம் ஆகலாம்!

இந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது சூப்பர் எல் நினோ. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1.0°C-க்கு மேல் உயரும்போது எல்... மேலும் பார்க்க

மதுரை: தூங்கா நகரத்தின் துயரம்; துர்நாற்றம் வீசும் வைகை நதி | Photo Album

துர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம்... மேலும் பார்க்க

வறண்டு கிடந்த ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் 18,000 கன அடி நீர்; உற்சாகத்தில் மக்கள்! | Album

தருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி ஒகேனக... மேலும் பார்க்க

குப்பையாகும் வனம்: ஆபத்தில் சிக்கும் வனவிலங்குகள்; 7,685 கிலோ நெகிழி, 6,110 கிலோ பாட்டில்கள் அகற்றம்

வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து வனப்பகுதிகளில் நெகிழிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறத... மேலும் பார்க்க

சென்னை: எத்திராஜ் கல்லூரி அருகே கூவம் ஆற்றில் கலப்பது கழிவு நீரா? குப்பைகளாலும் மாசுப்படும் கூவம்

எத்திராஜ் மகளிர் கல்லூரி அருகில் உள்ள சிக்னலுக்குப் பக்கத்தில் கூவம் ஆறு ஓடுகிறது. இதன் மேல் வாகனப் போக்குவரத்திற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 2009-10ம் ஆண்டில் ரூ.13.70 லட்சம் செலவ... மேலும் பார்க்க

அம்மாபேட்டை: பூங்காவில் அடைக்கலமாகும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் - கவனம் ஈர்க்கும் `Batman' Park!

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள அய்யாசாமி பூங்கா, வௌவால்கள் அதிக அளவில் வசிப்பதால் `பேட்மேன் பார்க்' என மக்களால் அழைக்கப்படுகிறது.பூங்காவின் வரலாறுஇந்தப் பூங்கா 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்ப... மேலும் பார்க்க