செய்திகள் :

அடிப்படை வசதிகளற்ற குன்னவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி; 15 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், 9-ஏ நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னவயல் கிராமத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளியில் போதிய குடிநீர் வசதி, தண்ணீர் தொட்டி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். கழிவறைகள் முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. மின் இணைப்புக்கான மெயின் பாக்ஸ் சேதமடைந்து கீழே விழும் அபாயகரமான நிலையிலும், நுழைவுவாயில் கதவு உடைந்தும், வளாகம் முழுவதும் குப்பைகள் குவிந்தும் காணப்படுகின்றன.

பள்ளி முடிந்த பின் அந்தப் பகுதி இளைஞர்கள் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி, பாட்டில்களை உடைத்து வீசுவதாகவும், இதனால் மறுநாள் மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், பள்ளி பொருள்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் இது தொடர்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இதன் காரணமாக சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை 3 மைல் தொலைவில் உள்ள பிற பள்ளிகளில் சேர்த்துள்ளதாகவும், தினமும் அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வர வேண்டிய நிலையால் பெற்றோரின் வேலை, நேரம், செலவு பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். போதிய பேருந்து வசதியும் இல்லாததால் தொலைதூரப் பள்ளிகளுக்கு அனுப்புவது கூடுதல் சிரமமாக உள்ளது.

இதன் விளைவாக பள்ளியில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டு, ஒன்றாம் வகுப்பில் புதிய சேர்க்கை இல்லாத நிலையும், ஐந்தாம் வகுப்பில் மாணவர்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது பள்ளியின் எதிர்காலத்தையும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கிறது.

எனவே, தூய்மையான குடிநீர், தண்ணீர் தொட்டி, சுகாதார கழிவறைகள், பாதுகாப்பான மின் இணைப்பு, மெயின் பாக்ஸ் சீரமைப்பு, நுழைவாயில் கதவு பழுதுநீக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மது அருந்துவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பான, சுகாதாரமான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

TVK-வில் இணைந்த 6 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மீது `உரிய' நடவடிக்கை! சபாநாயகர் உறுதி அளித்ததாரா?

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவ... மேலும் பார்க்க

`பட்டமளிப்பு விழா, Calligraphy பயிற்சி டு ஏசி வகுப்பறைகள்' - அசத்தும் பொய்யாமணி அரசுப் பள்ளி

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யாமணி கிராமத்தில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இப்பள்ளியில், 240 மாணவர்கள் பயின்று வருகின்றனர்... மேலும் பார்க்க

`வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை' - வாபஸ் பெற்ற ராமதாஸ்; பதவியை உறுதி செய்யும் அன்புமணி!

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகவே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அதைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

மணமேல்குடி: `உடனே என்னன்னு பாருங்க'- உத்தரவிட்ட ஆட்சியர், அமைச்சர்; சுடுகாட்டுப் பிரச்னைக்கு தீர்வு!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் சாயும் சரத் பவார்? - மகளுடன் சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சமீப காலமாக நாடாளுமன்றத்தில் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதற்காக மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்களின் ஆதரவை பெறும் ம... மேலும் பார்க்க

Indian Post: 25,000 முதல் 75,000 வரை பரிசு; இந்திய அஞ்சல் துறைக்குப் புதிய அடையாளம் தேடும் போட்டி!

இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது ... மேலும் பார்க்க