செய்திகள் :

"அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது" - உதயநிதி தாக்கு

post image

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, "தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் அனைவருக்குமான நலத் திட்டங்களை தி.மு.க அரசுதான் கொண்டு வந்திருக்கிறது.

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்
ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்

இந்த நலத் திட்டங்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் தலைவர் ஸ்டாலின்தான் அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மக்களிடையே நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியாக இருக்கிறது.

வரவிருக்கும் தேர்தல் வெற்றி தி.மு.க வரலாற்றில் மிகப்பெரிய சாதனை வெற்றியாக அமைய இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி போன்ற அடிமைகளைப் பிடித்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழையலாம் என மோடியும் அமித்ஷாவும் பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் திட்டம் வடநாட்டில் எடுபடலாம். ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்களின் இந்தக் கனவு பலிக்காது.

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்
ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்

பத்து தோல்வி பழனிசாமி இந்தத் தேர்தலில் படுதோல்வி பழனிசாமியாகப் போகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க- வின் ஏ.பி.சி ஆகிய டீம்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டின் சேம்பியனாக தி.மு.க- வும் முதல்வர் ஸ்டாலினும்தான் இருப்பார்கள்" எனக் கொதித்திருக்கிறார்.

இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் இருக்கிறது. அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எப்படி பரபரப்பாக இருக்கிறார்களோ... ஆங்காங்கே தென்படுகிறார்களோ... அதே அளவுக்கு தினமும் பறக்கு... மேலும் பார்க்க

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து ... மேலும் பார்க்க

தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா?

தற்போது ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி இருக்கின்றன. அதோடு உணவு பொருட்களின் வில... மேலும் பார்க்க

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

"அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று விமர்சித்து திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரிய... மேலும் பார்க்க

`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' - நிர்வாகிகள் கோரிக்கை - ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்... மேலும் பார்க்க

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்... மேலும் பார்க்க