செய்திகள் :

’அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வலுவான கம்பேக் கொடுக்கும்’ - ருதுராஜ் கெய்க்வாட்

post image

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “சி.எஸ்.கே அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகிப்பது என்பது தொடர்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். எம்.எஸ். தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவதே எனது அணுகுமுறையாகும்.

கடந்த சீசனில் அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால், அடுத்த சீசனில் அணி நிச்சயம் வலுவாகத் திரும்பும். கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியுடன் ரசிகர்கள் பல வெற்றிகளையும் சிறப்பான தருணங்களையும் கொண்டாடியுள்ளனர். அதேபோல அணியின் கடினமான காலகட்டங்களிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடர்ந்து அளிக்க வேண்டும். அடுத்த சீசனிலும் சி.எ.ஸ்கே அணியில் தொடர்வது குறித்து ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதுவே எனது முடிவாக இருக்கும். அணிக்கு அடுத்த சீசனில் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். அதற்கான முடிவை எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமை மிகவும் உற்சாகமளிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

Messi: ஒரு தேசத்தின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி... 20 ஆண்டுகால பயணத்துக்கு ஒரு பிரியாவிடை!

ஒரு காலத்தில், தேசிய அணிக்காக ஒரு பெரிய கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் சர்வதேச கால்பந்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி. ஆனால், அந்த முடிவு அவரது அர்ஜென்டினா பயணத்தின் முடி... மேலும் பார்க்க

'முதல் இந்தியர்' கிராண்ட் செஸ் டூரில் வென்ற பிரக்ஞானந்தா; ரூ.1.91 கோடி பரிசு!

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையும் பிரக்ஞானந்தாவிற்குச் சேர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் செயிண்ட் லூ... மேலும் பார்க்க

BWF உலக சாம்பியன்ஷிப்: இறுதி வரை போராடிய ட்ரீசா–காயத்ரி… வெண்கலம் வென்று அசத்தல்

புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், இந்திய பேட்மிண்டனுக்கு பெருமை சேர்த்திருக்கிறது ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடி. சீனாவ... மேலும் பார்க்க

"வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை"- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது!

கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.... மேலும் பார்க்க

BWF: உலக சாம்பியனையே வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி; முதல் நாளிலேயே 5-க்கு 5; இந்தியாவின் மிரட்டல் தொடக்கம்!

புதுடெல்லியில் நடைபெற்று வரும் 2026 BWF உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி. ஆண்கள் ஒற்றையர் பிரிவ... மேலும் பார்க்க

ஆலப்புழா: கோப்பையின் பின்னால் மறைந்திருக்கும் நிதிச் சுமை; புகழ்பெற்ற படகுப் போட்டிகளின் மறுபக்கம்!

கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், கைனகரி கிராமத்தின் படகு சங்கம் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டது."முப்பத்தைந்து ஆண்டு இடைவெளி... ஒரே இரவில் கை நழுவிய சாம்பியன் அணி... ஆனாலும் தோற்றுப்போக மறுத்த ஒரு அணி!" — 2... மேலும் பார்க்க