செய்திகள் :

'அதானி வழக்கை ஓராண்டிற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்' - அமெரிக்க நீதித்துறை விளக்கம்

post image

கடந்த மே மாதம், அமெரிக்காவில் அதானி மற்றும் அதானி குழுமத்தின் மீது தொடர்ந்திருந்த மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரியது அமெரிக்க நீதித் துறை.

இந்த வழக்குகள் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் காலத்தில் தொடுக்கப்பட்டவை.

வழக்கை திடீர் என்று தள்ளுபடி செய்ய அமெரிக்க நீதித் துறை கேட்டதால், ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. இதனால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய சொல்வது ஏன் என்கிற கேள்வியை முன்வைத்தார் அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ்.

அதானி
அதானி

இதற்குப் பதிலளித்து அமெரிக்க நீதித் துறை சமர்ப்பித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...

"இந்த வழக்கை ஒரு வருடத்திற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அல்லது ஆரம்பத்திலேயே இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கவே கூடாது.

வழக்கை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்வதற்கான துறையின் முடிவை மறுபரிசீலனை செய்வதில், நீதிமன்றத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அதிகாரம் மட்டுமே உள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகை என்பது வெறும் பெயரைக் கெடுத்து அசிங்கப்படுத்தும் ஒரு செயல்தான். இதை நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு செல்வதற்கான எவ்வித நடைமுறை சாத்தியக்கூறுகளும் இல்லை.

இதில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் நடக்கவில்லை. அதுமட்டுமன்றி, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குகளில் முதலீட்டாளர்கள் ஒரு பைசாவைக் கூட இழக்கவில்லை.

இந்த பங்குச்சந்தை சார்ந்த (Securities) குற்றச்சாட்டுகளுக்குச் முறையான சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லை; அதுமட்டுமன்றி, இதுபோன்ற விவகாரங்களில் அமெரிக்கா 'உலக போலீஸ்' போலச் செயல்படக் கூடாது."

GST : `13 மாதங்களில் இல்லாத வளர்ச்சி' - ஜூன் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடியைத் தாண்டியது!

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜூன் 2026-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப... மேலும் பார்க்க

"கரூரில் ஜவுளி பரிசோதனை மையம்" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல்

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. meetingஇந்த நிகழ்ச்சியில் சிறப்... மேலும் பார்க்க

மயிலாப்பூர்: இரு சக்கர வாகனமே கடை: கருப்பு உளுந்து களி டு இளநீர் அல்வா... கவனம் ஈர்க்கும் இளைஞர்!

சென்னையின் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் அருகே மாலை நேரத்தில் மக்கள் கூட்டத்துக்கிடையே, இளைஞர் ஒருவரின் வித்தியாசமான முயற்சி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.டூ வீலரிலேயே சிறுதானிய உணவுகள், பாரம... மேலும் பார்க்க

வெறும் கிரெடிட் கார்டு ஆப் மட்டுமல்ல.! CRED மீது META ரூ.8,500 கோடியை கொட்டுவதன் மெகா பிளான் என்ன?

இந்தியாவின் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான க்ரெட் (CRED) மீது, டெக் உலகின் ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனம் சுமார் 900 மில்லியன் டாலர் (சுமார் 8,500 கோடி முதலீடு... மேலும் பார்க்க

தொழில்நுட்பமும் நஸ்டால்ஜியாவும்: NOIZZYBOX-இன் தனித்துவமான வெற்றி! | StartUp சாகசம் 62

இந்தியாவில் மியூசிக் பாக்ஸ் சந்தை, கடந்த சில ஆண்டுகளாக ஒரு தனித்துவமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music streaming) உலகிலும், பழைய நினைவுகளை (Nostalgia) மீட... மேலும் பார்க்க