செய்திகள் :

'அதிமுகவினரை தவெகவில் இணைப்போம் என்று சொல்வது அறமா? அவர்களிடமே கேளுங்கள்' - திருமாவளவன்

post image

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், 'அதிமுகவில் இருந்து தொடர்ந்து பலர் தவெகவில் இணைந்து வருவது' குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அவரது பதில்...

"இது குறித்து இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே கருத்து சொல்லவில்லை.

அதிமுகவை முற்றாக முழுதுமாக நாங்கள் தவெகவில் இணைப்போம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறது என்றால், அவர்களிடமே நீங்கள் இது சரியா, ஜனநாயகமா, அரசியல் அறமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆனால் சம்பந்தமில்லாமல் தவெகவிலும் இல்லாத, அதிமுகவிலும் இல்லாத எங்களைப் போன்றவர்கள் இடத்தில் நீங்கள் எழுப்புகிற கேள்வி பொருத்தமில்லாததாக இருக்கிறது. குதிரை பேரம் போன்ற புகார்கள் குறித்து அந்த இரண்டு கட்சிகளும்தான் பதில் சொல்ல வேண்டும்.

குதிரை பேரம் நடந்தது உண்மையாக இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் அதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

குறிப்பாக, இந்தச் சட்டமன்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்கிற சட்டத்தைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்கப் போவதாகத் தெரிகிறது.

ஏற்கனவே அதனை தொகுதி மறுவரையறை மசோதா என்கிற பெயரில் கொண்டு வந்தபோது திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தோம். இப்போதும் அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம்.

மேற்கு வங்கத்திலே திரிணாமுல் காங்கிரஸிலிருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றி அரசியல் சூதாட்டம் ஆடுகிற நிலையை நாம் பார்க்கிறோம்.

நாடாளுமன்றத்திற்குச் சென்றால்தான் இது குறித்த முழு நிலைமை என்ன என்பது தெரியவரும் என்றாலும், நாங்கள் இந்த முறையும் அந்த முயற்சியை முறியடிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்".

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க