செய்திகள் :

அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? ஈஷா சிவராத்திரி விழாவில் பிரேமலதா - வேலுமணி சந்திப்பு

post image

தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு திமுகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாமக ராமதாஸ் அணி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறார்கள்.

தேர்தல்
தேர்தல்

இன்னும் சில நாள்களில் கூட்டணிகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேலுமணி பிரேமலதா சந்திப்பு

மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோரும் ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். முக்கியமாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார்.

எஸ்.பி. வேலுமணி தான், பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, வேலுமணி கலந்து கொண்டனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

அதன் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. அதே நிகழ்வில் இந்த முறை வேலுமணியுடன் பிரேமலதா கலந்திருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சசிகலா: `ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டம்?' - பசும்பொன்னில் பந்தல்கால் நட்ட ஆதரவாளர்கள்!

மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் தமிழரசி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மறைந்த நடராஜனின் மனைவி வி.கே.சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா ஒரு கட... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: உதயநிதி கலந்துகொண்ட திருமணம்; போன் செய்த கே.என்.நேரு? அகற்றப்பட்ட பேனர்களால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழஞ்சூர் செல்வம். இவர் திமுக-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைத் தலைவராக இருக்கிறார்.வரும் சட... மேலும் பார்க்க

ஈரோடு: 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பயணம்; புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்த EPS |Photos

மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம்மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம்மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம்மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம்மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம்மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம்மக்களைக் காப்ப... மேலும் பார்க்க

`அன்று கருணாநிதி ஒழிக; இன்று ஸ்டாலின் வாழ்க’ - கட்சித் தாவிய அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

இருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், `சமத்து’ என்பார்கள். அதுபோல, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் `இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.அப்படியிருந்தும், த... மேலும் பார்க்க

"திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை" - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?

தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதத... மேலும் பார்க்க