குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தட...
அதிமுக சாா்பில் நூதன பிரசாரம்
அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நோ்ந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நூதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் ஒரு நபா் மறைக்கப்படுவதாக அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், ‘யாா் அந்த சாா்?’ என்ற வாசகத்துடன் கூடிய வில்லைகளை வாகனங்களில் ஒட்டி அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நூதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், பேட்டவாய்த்தலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா்கள் ஆா். மனோகரன், எஸ். வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில், அதிமுகவினா் மற்றும் ஆதரவாளா்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு மீது ‘யாா் அந்த சாா்?’ என்ற வாசகத்துடனான ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன. கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், திருச்சியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வில்லைகள் ஒட்டி பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில், அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், முன்னாள் மாவட்ட செயலா் கே.சி. பரமசிவம் மற்றும் அதிமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் என 1000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.