Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதிய...
Anaswara Rajan: "அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என நினைத்துக் கொண்டிருந்தேன்" - அனஸ்வரா ராஜன்
மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் நடிகை அனஸ்வரா ராஜன்.
அவர் நடித்திருக்கும் 'சாம்பியன்' என்ற தெலுங்கு திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதுதான் அனஸ்வரா தெலுங்கில் அறிமுகமாகும் திரைப்படம்.

அப்படத்திற்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என்று நினைத்ததாகக் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
அனஸ்வரா ராஜன் பேசுகையில், "நான் அல்லு அர்ஜுன் சாரை மலையாள நடிகர்களில் ஒருவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
குழந்தைப் பருவத்தில் கேரளாவில் அவரது திரைப்படங்கள் பிரபலமாக இருந்ததால், அவரது படங்கள் மலையாள மொழி என்றே நினைத்து வந்தேன்.

ஒருபோதும் அது மற்ற மொழி படங்கள் என யோசித்ததில்லை. அல்லு அர்ஜுன் சார் நடித்த படங்கள் மட்டுமல்ல, நீண்ட காலமாக தெலுங்கு படங்களை மலையாள டப் செய்யப்பட்ட வெர்ஷன்களில் பார்த்துவந்தேன்" எனக் கூறியிருக்கிறார்.
தமிழில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷேக் ஜீவித் உடன் இவர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.



















