நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்
தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும். அண்ணாமலை தவெகவை தொடர்ந்து விமர்சிக்கிறார். எனக்கு அவரைப் பற்றித் தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய் கிடையாது. முக்கியமாக குரைக்கிற நாய் இல்லை.

நாங்கள் ஆறறிவுள்ள மனிதர்கள். தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவுள்ள தொண்டர்கள். விஜய் தற்போது நடிகர் கிடையாது. அவர் முன்னாள் நடிகர். விஜய் நடிப்பை முற்றிலுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு மக்கள் சேவை செய்வதற்காக வந்துள்ளார்.
ஈரோடு மாநாட்டிற்கு வந்தவர்கள் நடிகரைப் பார்ப்பதற்காக வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக இருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரைதான் பார்க்க வந்தார்கள். விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் அரசியலில் தற்போதும் சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை.
Political Vijay is more Powerful then Actor Vijay.” என்று ஆங்கிலத்தின் கூறினார். தொடர்ந்த பேசிய அவர், “அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தமிழ்நாடு வளர்ச்சி, சமூக நீதி, தொழில் வளர்ச்சி, இயற்கை வளங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் அதில் இருக்கும்.
களத்தில் யார் இல்லை என்று மக்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்காவது பணம் கொடுக்காமல் வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் இவ்வளவு கூட்டம் வருமா. அப்படியென்றால் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது, களத்தில் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்கள் உள்ளதா என்பதை மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டும். உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படக்கூடாது. எங்கள் அரசியல் அறிவை யாரும் குறைவாக எடை போட வேண்டாம். உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.” என்றார்.


















