செய்திகள் :

அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளடி? ஏமாற்றப்பட்ட என்.ஜி.பார்த்திபன்! - சோளிங்கர் தொகுதி களேபரம்!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை அறிவித்துவிட்டார் டி.டி.வி.தினகரன்.

அதாவது, சோளிங்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன்தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவார். தி.மு.க-வுக்கான சாவு மணியை இங்கிருந்து அடிப்போம்’ என்றார்.

இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு பதினோரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோளிங்கர் தொகுதி இடம்பெறவில்லை என்கிறார்கள். மாறாக, பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர்களின் ஆதரவாளர்களும் அ.தி.மு.க கூட்டணி மீது வெறுப்படைந்திருக்கிறார்கள்.

என்.ஜி.பார்த்திபன்

`ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில், பா.ம.க-வுக்கு ஆற்காடு தொகுதியும், அ.ம.மு.க-வுக்கு சோளிங்கர் தொகுதியும், அ.தி.மு.க-வுக்கு அரக்கோணம் தனித் தொகுதியும், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை தொகுதியும் ஒதுக்கப்படும்’ என்பதே என்.டி.ஏ மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, அடிமட்ட தொண்டர்களாலும் உத்தேசிக்கப்பட்டது.

இவ்வளவு களேபரத்துக்கும் ஒரே காரணம், `பா.ம.க-வுக்கு கிடைக்க வேண்டிய ஆற்காடு தொகுதியை அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் தான்னோன்றித்தனமாக கைப்பற்றியதே’ என்று கொதிக்கிறார்கள் என்.டி.ஏ கூட்டணியினர்.

கடந்த தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில்தான் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுமார், தி.மு.க-வின் சிட்டிங் அமைச்சரான ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலும், தோல்வி பயம் வந்துவிட்டதால், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமில்லாமல், ஆற்காடு தொகுதிக்கு தாவிச் சென்றிருக்கிறார் சுகுமார் என்று அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுமே விமர்சிக்கிறார்கள்.

`பா.ம.க-வுக்கு ஆற்காடுக்கு பதிலாக ராணிப்பேட்டை தொகுதியை கொடுத்துவிடலாம்’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அணுகி, தனது யோசனையை சொல்லியிருக்கிறார் சுகுமார். அது தொடர்பான பேச்சுவார்த்தையில், `ராணிப்பேட்டை தொகுதி பா.ம.க-வுக்கு சாதகமானது இல்லை’ என்று பாட்டாளிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து, பா.ம.க தலைவர் அன்புமணியை சமரசம் செய்யவும் சுகுமார் தரப்பு முயன்றது. பா.ம.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சரவணனுக்கு சோளிங்கர் தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது.

எஸ்.எம்.சுகுமார்

இதையறிந்து, சரவணன் மூலமாக பா.ம.க தலைவர் அன்புமணியை சமீபத்தில் சந்தித்து `ஆற்காடு தொகுதியை விட்டுக் கொடுத்து, சோளிங்கர் தொகுதியை பெற்றுக் கொண்டால், தேர்தல் செலவையும் பார்த்துக் கொள்கிறோம்’ என்று எஸ்.எம்.சுகுமார் தரப்பு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, அன்புமணி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, சோளிங்கர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. அ.ம.மு.க வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை ஏற்கெனவே அறிவித்துவிட்டதால், பார்த்திபனும் களத்தில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். `அன்று பார்த்திபனை தூக்கிபிடித்த தினகரனுமே இன்று ஏமாற்றிவிட்டாரே’ என்று பொருமித்தள்ளுகிறார்கள் அ.ம.மு.க தொண்டர்கள். என்.டி.ஏ கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பதால், சோளிங்கர் தொகுதி களேபரமாகியிருக்கிறது.!

'கூட்டணி போறவங்க நரிக்கூட்டம் மாதிரி... விஜய்தான் சிங்கம்!' - பஞ்ச் அடிக்கும் செங்கோட்டையன்!

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ... மேலும் பார்க்க

'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' - ஆதவ் அர்ஜூனா

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ... மேலும் பார்க்க

மநீம சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்!

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். மநீம தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை வா... மேலும் பார்க்க

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக... மேலும் பார்க்க

`10 தொகுதிகள்' - திமுக - தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்ல... மேலும் பார்க்க

அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது' என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூ... மேலும் பார்க்க