செய்திகள் :

Vijay Sethupathi: 'ஜெயிலர் 2' முதல் மகிழ் திருமேனி படம் வரை! - விஜய் சேதுபதியின் பரபர லைன் அப்!

post image

தனித்துவமான கதைகள், பக்குவமான பாத்திரங்கள், தேர்ந்த நடிப்பு, வித்தியாசமான களங்கள் இவைதான் விஜய் சேதுபதியின் ஆரம்ப அடையாளங்களாக இருந்தன.

இப்போது 'மகாராஜா'வில் கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து மிகவும் செலெக்டிவ் ஆக படங்களைத் தேர்ந்தெடுத்து செய்கிறார். தமிழ் நடிகர்களில் கையில் அதிகப்படியான படங்களை கையிருப்பில் வைத்திருப்பதும் அவர்தான்.

Vijay Sethupathi
Vijay Sethupathi

இப்போது மைக்கேல், பிரேம், தாஸ், சுமார் மூஞ்சி குமார், முருகேசன் என்று வெவ்வேறு மனிதர்களைப் பிரதிபலிக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியைத்தான் விரும்புகிறார்கள் என்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டதாகவே கூற வேண்டும்.

தியேட்டரைத் தாண்டி இந்த வாரம் அவர் நடித்திருக்கும் 'காட்டான்' சீரிஸும் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அவர் கைவசம் வைத்திருக்கும் பட லைனப் அப்டேட்களைப் பார்ப்போமா...

விஜய் சேதுபதி நடித்த 'ட்ரெயின்' இப்போது ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. கோடை விடுமுறையில் ட்ரெயின் வெளியாகி விடும். முற்றிலும் புதிய விதத்தில் முழுக்க ஒரு ரெயில் பயணத்தில் நடக்கும் கதையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

'Slumdog' திரைப்படம் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ரெடியாகிவிட்டது. ஆந்திரா, மும்பை போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஆக்ஷன், எமோஷன் கலந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது.

விஜய் சேதுபதி

சத்தமே இல்லாமல் 'சீதக்காதி'க்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தையும் விஜய் சேதுபதி நடித்து முடித்து விட்டார். ஒரே மூச்சில் படத்தை நடித்துக் கொடுத்து விட்டார் சேதுபதி. அவரின் அபிமான இயக்குநர்களின் பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஜெயிலர் 2' படத்தில் ஒரே ஒரு நாள் நடித்தாலும் திருப்பம் தரக்கூடிய ஒரு வேடத்தில் சேதுபதி நடித்திருக்கிறார். அவரின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

'பாக்கெட் நாவல்' தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவருடைய மிகவும் வித்தியாசமான கேரக்டர் என்று தெரிகிறது.

சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்திலும் முக்கிய பங்கு ஏற்றிருக்கிறார் சேதுபதி. வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தயாரிப்பாளர் தாணுவின் அன்பிற்காகவும் நடிக்கிற படமாக 'அரசன்' அமைகிறது.

Mani Ratnam - Vijay Sethupathi
Mani Ratnam - Vijay Sethupathi

இவற்றின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மணிரத்னம் இயக்கும் படம் ஆரம்பமாகிறது. அதற்கான கதை விவாதங்களில், சற்று ஓய்வாக இருக்கும் போது கலந்து கொள்கிறார் சேதுபதி. இந்தப் படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

'மகாராஜா 2' ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டார் டைரக்டர் நித்திலன். சேதுபதிக்கும் அதன் கதை சொல்லப்பட்டு அவர் ஓகே சொல்லிவிட்டார். மணிரத்னம், வெற்றிமாறன் படங்களுக்கு ஈடாக இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இதற்கிடையில் இயக்குநர் மகிழ்திருமேனியும் கதை சொல்லி அதுவும் தயாரிப்புக்கு போகப்போகிறது. மணிரத்னம் படம் முடிந்த பிறகு இவைகளின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

``ஏ.ஆர்.ரஹ்மானே இல்லை, நான் எம்மாத்திரம்னு மனச தேத்திக்கிட்டேன்!"- 'கருப்பு' படத்தில் நடித்த‌ ஆனந்தி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா என முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.இந்தப் படத... மேலும் பார்க்க

"நீங்கள் 'துரந்தர் 2'வை 'மஸ்ட் வாட்ச்' என்று அழைப்பது.!" - பாராட்டிய ரஜினி; நன்றி சொன்ன இயக்குநர்!

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், அர்ஜூன் ராம்பல் நடிப்பில் உருவான 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் வெற்றியை... மேலும் பார்க்க

Karuppu: "ஏ.ஆர். ரஹ்மான் விலகிய பிறகு, சாய் அபயங்கரைத் தேர்வு செய்தது ஏன்?" - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

ஆர்.ஜே. இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சாய் அபய... மேலும் பார்க்க