செய்திகள் :

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

post image

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி

> மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம்.

> அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ்

> ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம்

> முன்னாள் படைவீரர் பிள்ளைகளுக்கு அரசு, கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பயில 1 சதவிகிதம் இடஒதுக்கீடு

> ஊரக வேலைத்திட்டம் 150 நாட்களுக்கு உயர்த்தப்படும்

> வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளிபடி செய்யப்படும்

> தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை

> ஜல்லிக்கட்டின்போது காயமடைந்தால் 2 லட்சம்; உயிரிழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

> கோயில்களில் அன்னதானத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

> ராணுவத்தில் உயிர்நீத்த, படை வீரர் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்

> வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்

> வீடு இல்லாத குடும்பங்களுக்கு 'அம்மா இல்லம்' திட்டத்தின் பெயரில் வீடு கட்டித்தரப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

More details will be updated here..!

அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளடி? ஏமாற்றப்பட்ட என்.ஜி.பார்த்திபன்! - சோளிங்கர் தொகுதி களேபரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க த... மேலும் பார்க்க

அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது' என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூ... மேலும் பார்க்க

எதிரெதிர்: திமுக வேட்பாளர்களுக்கு தண்ணீர் காட்டும் காங்கிரஸ்; புகைச்சலில் புதுச்சேரி இந்தியா கூட்டணி

தி.மு.க தொகுதிகளுக்கு அடம்பிடித்த காங்கிரஸ்புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணிய... மேலும் பார்க்க

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! - தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்... மேலும் பார்க்க

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவு... மேலும் பார்க்க