செய்திகள் :

'ஒரு அறை விட்டேன், அப்புறமும் பாலியல் தொல்லை குறைய‌லை!' - டெல்லி வரை சென்ற `நம்பர் 2' மீதான புகார்

post image

மத்திய ஆளுங்கட்சி சார்பாக மக்களுக்குச் சொல்ல ஏதாவது கருத்து இருந்தால் முண்டியடித்துக் கொண்டு முதல் ஆளாக மீடியா முன் வந்து விடுகிறவர் அந்தப் பிரமுகர். மாநிலத்தில் இருக்கும் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதங்களிலும் பங்கேற்று பேசுவார். அவர் இருக்கும் கட்சியின் நம்பர் 2 வேறு.(அக்கட்சியில் பல நம்பர் 2-க்கள் உண்டு!)

இவர் மீது, சொந்த கட்சி மகளிரணி நிர்வாகி ஒருவர் கூறியிருக்கும் ஏடாகூடப் புகார் இந்திய தலைநகர் வரை சென்றிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் தேர்தலை மிஞ்சிய சூடாக தகிக்கிறது.

ரெண்டு நாள் முன்பு 'என் திறமையைப் பயன்படுத்திக்க மாட்டேங்கிறாங்க' என் குமுறியவருடன் இருந்தவர்தான் புகாருக்கு ஆளானவர்.

தேசிய நீரோட்டத்தில் இணைந்தவருக்கு சேர்ந்த இடத்தில் மரியாதையும் கிடைக்கவே செய்தது. நம்பர் 2 என்கிற அளவில் பதவி தந்தார்கள். ஆனால் இருந்த இடத்துக்குப் பொருத்தமானவராக நடந்து கொள்ளவில்லையோ என இப்போது பலரையும் யோசிக்க வைத்துள்ளது மேற்படி புகார்.

'உன்னை முதன் முதல்ல பார்த்ததுல இருந்தே உன் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிடுச்சு. தனியாதான் இருக்கேன், வர முடியுமா' என சம்பந்தப்பட்ட மகளிரணி தலைவியை இரவில் அழைத்துள்ளார். அந்தத் தலைவியோ 'இரவு நேரத்தில் நான் யாரையும் சந்திப்பதில்லை' எனச் சொல்லி விட்டு போனைக் கட் செய்துள்ளார்.

அடுத்த சில தினங்களில் கட்சி வேலையாக அலுவலகம் சென்று அவரையே சந்திக்க வேண்டிய சூழல் அந்த நிர்வாகிக்கு.

பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

நான்கைந்து பெண்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். 'என்ன, தனியா வருவான்னு பார்த்தா படையோட வந்திருக்காளே' என யோசித்த நம்பர் 2, ஒப்புச் சப்புக்கு கொஞ்சம் நேரம் பேசி விட்டு 'அப்ப நீங்க எல்லாரும் கிளம்புங்க' எனச் சொல்லியிருக்கிறது.

உடன் வந்தவர்களுடன் சேர்ந்து தலைவியும் கிளம்ப முற்பட, 'நீ எங்க போற' என அவரை மட்டும் இருக்கச் சொல்லியிருக்கிறார் அவர்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இருக்கையில் அமர, அருகே வந்து தன் சேட்டையை தொடங்கியிருக்கிறார் நம்பர் 2 நபர்.

அவ்வளவுதான், மறு நொடி கன்னம் பழுக்க ஒரு அறை. கொடுத்து விட்டு வெடுக்கென வெளியேறி விட்டார் மகளிரணி.

அடி வாங்கின பிறகு சும்மா இருப்பாரா. அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட தொல்லைகள் தந்து கொண்டே இருந்திருக்கிறார்.

'கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துட்டு போயிட்டா மகாராணி மாதிரி இருக்கலாம். புரிஞ்சு நடந்துக்கோ' என கிடைக்கிற கேப்பிலெல்லாம் நூல் விட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஆனால் இடம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து விட்டார் அந்த பெண் நிர்வாகி.

பொறுத்துப் பார்த்த நிர்வாகி, இதற்கு முன் அக்கட்சி மாநில தலைவராக இருந்தவரிடம் புகாரும் தந்திருக்கிறார்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, முன்பு காவல் பணியிலிருந்த அந்த தலைவரும் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

விளைவு, தேர்தல் நேரம் பார்த்து விஷயத்தை டெல்லிக்கு புகாராக அனுப்பி கலகத்தை தொடங்கி வைத்துவிட்டார். மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாமே அந்த புகாரில் இருந்தது தான்.

பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தப் பெண்ணிடம் நாம் பேசினோம்.

''ஆமாங்க. புகார் சொன்னது நாந்தான். புகாரில் சொல்லியிருக்கும் அத்தனையும் நான் அனுபவச்சது. எனக்கு நடந்தது. ஒரு தடவை கன்னத்துல அறைஞ்சதும் திருந்திடுவார்னு பார்த்தேன். அப்படியும் திருந்தலை. கட்சிங்கிற ஒரு அமைப்புல இருக்கிறதால புகாரை முதல்ல அங்க அனுப்பி வச்சேன். இங்க இருக்கிறவங்க நடவடிக்கை எடுக்காட்டி அடுத்து அங்கதான அனுப்ப முடியும். அதான் அனுப்பியிருக்கேன். அவங்க இந்தாள் மேல என்ன நடவடிக்கை எடுக்கறாங்கங்கிறதைப் பொறுத்தே என் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்க்கும்' என முடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! - தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்த... மேலும் பார்க்க

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவு... மேலும் பார்க்க

சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

ஈரான் போரினால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை இந்தியாவில் படாதப்பாடு படுத்தி வருகிறது. இந்தத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான ஒன்று 'ஹோட்டல் துறை'. சென்னை போன்ற பெருநகர... மேலும் பார்க்க

இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் இருக்கிறது. அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எப்படி பரபரப்பாக இருக்கிறார்களோ... ஆங்காங்கே தென்படுகிறார்களோ... அதே அளவுக்கு தினமும் பறக்கு... மேலும் பார்க்க