செய்திகள் :

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? - இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

post image

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன?

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்
எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியைக் காட்டமாக விமர்சித்து வந்தார்.

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு வந்ததை எங்கள் பொதுச் செயலாளரால் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு தொகுதியிலும் வேலுமணி & சண்முகம் தரப்பு உள்ளடி வேலைகள் பார்த்ததாக அவர் காதுகளுக்கு செய்திகள் போகவே இன்னும் கடுப்பாகிவிட்டார்.

எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்
எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்

அதிலும், தாராபுரத்தில் நடந்த சம்பவங்கள் அவருக்கு இன்னும் வேதனையைக் கொடுத்துவிட்டது. வேலுமணியும் சண்முகமும் வெளியில் இறங்கிவந்து பேசுவதுபோல் காட்டிக்கொண்டாலும், கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களோடு த.வெ.க அரசுக்கு ஆதரவாக நிற்கவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் எடப்பாடியாரின் காதுக்குப் போகவே, ,'இவர்களை இப்படியே விட்டால் கட்சியை அழித்துவிடுவார்கள், பேசாமல் கட்சியை விட்டு நீக்கிடலாமா?' என நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், அப்படிச் செய்தால், எம்.எல்.ஏ பதவியோடு அவர்கள் த.வெ.கவுக்குப் போய்விடுவார்கள், கட்சியிலிருந்தும் பலரை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என ஒருசிலர் சொல்லவும் கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் இறுதி முடிவை எடுக்காமல், வெளியில் அதுகுறித்துப் பேசமாட்டார். மனதளவில் இருவரையும் நீக்கத் தயாராகிவிட்டார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியில் வரலாம்'' என்கிறார்கள்.

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்த... மேலும் பார்க்க

'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். முதல்வர் விஜய்தமிழ... மேலும் பார்க்க

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்!

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'ஸ்டிங் ஆபரேஷன்' ஒன்றில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை ஆறு ஆண்ட... மேலும் பார்க்க

"இனி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்" - உதயநிதி

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். நேற்று கோவையிலிருந்து ராகவன் என்னும் விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார். இவர்களைப் போலீசார் தேடி வர... மேலும் பார்க்க