'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார்...
'அது இல்லாமல் சாத்தியமில்லை!'; முதல் படமும் 100-வது படமும் மோகன்லால் உடன் தான் - வெளியான அப்டேட்
சீனியர் இயக்குநர் பிரியதர்ஷன் அவருடைய 100-வது படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். 1984-ல் இவருடைய முதல் படமான 'பூச்சக்கொரு மூக்குத்தி (Poochakkoru Mookkuthi)' திரைப்படம் வெளியாகியிருந்தது.
இப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, இயக்குநர் பிரியதர்ஷன், தன்னுடைய 100-வது படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கவிருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பிரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி, மல்லுவுட்டில் மிக முக்கியமான ஹிட் காம்போ எனலாம். இந்தக் காம்போவில் இருந்து 40-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தக் கூட்டணி, கடைசியாக 2021-ல் வெளிவந்த 'மரக்கர்' படத்தில் இணைந்திருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு பிரியதர்ஷன், "என்னுடைய 100-வது திரைப்படத்தை மோகன்லாலை வைத்துதான் இயக்குவேன்" என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது அத்திரைப்படம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை காணொளி வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் காணொளியில் பிரியதர்ஷன், "டிராமாவுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்குப் படமாக இது இருக்கும். மோகன்லால் போன்ற ஸ்டாருடன் படம் எடுப்பது ஆக்ஷன் இல்லாமல் இனி சாத்தியமில்லை. அதனால் அது நிச்சயமாக இருக்கும்" எனப் பேசியிருக்கிறார்.
Some milestones do not belong to one person alone. They belong to everyone who stood close enough to witness the journey.
— Mohanlal (@Mohanlal) March 21, 2026
My dearest Priyan is stepping into his 100th film, and I find myself without words for what that truly means to me.
A hundred films is not just a number. It… pic.twitter.com/9AXJyjTNdW
இந்தக் காணொளியை மோகன்லால் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, "சில மைல்கற்கள் ஒரு நபருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அந்தப் பயணத்தை அருகில் நின்று பார்த்த அனைவருக்கும் சொந்தமானவை. என் அன்பான பிரியன் தனது 100வது படத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார். இது எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நூறு படங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. சில தருணங்கள் விளக்கப்பட வேண்டியவை அல்ல. அது உணரப்பட வேண்டியவை மற்றும் நன்றியுடன் மனதில் நிறுத்தப்பட வேண்டியவை. பிரியதர்ஷன் உருவாக்கிய எல்லாவற்றுக்கும், இன்னும் சொல்லப்பட வேண்டிய கதைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















