செய்திகள் :

'அது தவெக-வுக்குச் சாதகமாக முடியும்.!'- இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாதது ஏன்? அரசியல் கணக்கு என்ன?

post image

அக்டோபர் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி இருக்கிறது.

இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியில் வன்னிய சமுதாய ஓட்டுகள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. அதனால் பாமக ஆதரவை பெறும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் என கணிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர் சுவாமிநாதன்
பத்திரிகையாளர் சுவாமிநாதன்

பாமக போட்டியிடாதது ஏன்?

ஆனால் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாததற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? ஆதரவு தெரிவிப்பதில் காலதாமதம் ஏன்? என்ற கேள்விகளுடன் பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புக்கொண்டு பேசினோம்.

மதுராந்தகத்தில் தவிர்க்க முடியாத சக்தி பாமக

நம்மிடம் பேசிய அவர், " மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தாராபுரத்தில் பாமகவின் பங்கு எதுவுமில்லை. அங்கு பாமகவின் முதன்மை வாக்காளர்களான வன்னியர் சமூக வாக்குகள் எதுவும் இல்லை.

அதே நேரத்தில் மதுராந்தகத்தில் தவிர்க்க முடியாத சக்தி பாமக. 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக அந்தத் தொகுதியில் 9% வாக்குகளைப் பெற்றது. 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டபோதே 9% வாக்குகளைப் பெற்றனர்.

மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி
மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி

அன்புமணியின் ஆதரவு எல்லாக் கட்சிக்கும்.!

பொதுவாக அந்தத் தொகுதியின் வரலாறு ஆளுங்கட்சி சார்ந்தே இருக்கும். ஆனால் 2021-ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்தும் அதிமுக வென்றது. 2026-ல் தவெக ஆளுங்கட்சியாக மாறும் சூழலிலும் அதிமுக வெல்கிறது. அதற்கு முக்கியக் காரணம் பாமகவின் வாக்கு வங்கி.

கூட்டணியில் பாமக இருப்பதால் வாக்குகள் சரியாகப் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்ததும் பாமக ஆதரவுக்கு முக்கியக் காரணம். எனவே, மதுராந்தகத்தில் அன்புமணியின் ஆதரவு என்பது எல்லாக் கட்சிக்கும் முதன்மையானது.

தவெகவுடன் நெருக்கம்

அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிச்சயம் தேவையாக இருக்கிறது. ஆனால், பாமக தரப்பு ஒரு டிமாண்டை உருவாக்க விரும்புகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பாமக கூட்டணியே காரணம் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, உடனே ஆதரவு தராமல் கடைசி நேரத்தில் ஆதரவு தந்தால் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்க முடியும் என நினைக்கின்றனர்.

இன்னொரு பக்கம், தவெக தரப்பிலும் பாமகவுக்கு நெருக்கம் காட்டப்படுகிறது. சௌமியா அன்புமணிக்கு முக்கியத்துவம் தருவது, அவரது அப்பாவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது போன்றவை இதற்குச் சான்றாக இருக்கிறது.

விஜய், சௌமியா அன்புமணி
விஜய், சௌமியா அன்புமணி

அது தவெகவுக்குச் சாதகமாக முடியும்.!

அவர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் ரூலிங் பார்ட்டியாக இருக்கிறார்கள், ஆட்சிப் பங்கு அதிகாரப் பங்கு கொடுத்திருக்கிறார்கள். பாஜக தலையிட்டால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.

இல்லையெனில், தேர்தலில் நடுநிலை வகிக்கலாம். அது தவெகவுக்குச் சாதகமாக முடியும். திமுக வந்து ஆதரவு கேட்டாலும், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதால் பாமகவுக்கு அரசியல் ரீதியாக எந்த லாபமும் இல்லை, அதனால் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு குறைவு" என்று அரசியல் நிலவரத்தை விளக்கினார்.

பள்ளி மாணவன் இறப்பு விவகாரம்: மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; தள்ளுமுள்ளு... பரபரப்பு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

"யாரும் என்னை மிரட்ட முடியாது; பண்ணையார் அரசியல் எல்லாம்..!"- கே.என் நேருவுக்கு துரை வைகோ பதில்

மதிமுக எம்.பி துரை வைகோ செப்.15 செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? எனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக... மேலும் பார்க்க

``மூளை திசு ஆய்வு படிப்பை இவர் மட்டுமே படிக்கிறார்; அரசு உறுதுணையாக இருக்கும்" - அமைச்சர் வன்னி அரசு

அயலக மாணவர் பாரதிதாசனுக்குத் தேவையான அனைத்து கல்வி உதவித்தொகைகளும் தமிழ்நாடு அரசால் உடனடியாக வழங்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ப... மேலும் பார்க்க

தொடரும் பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை: `இலக்கு 2030; எட்டப்போவதோ 2197!' - ஐ.நா அறிக்கை

2030-ம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடைய வேண்டும் என்ற உலகளாவிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால் அந்த இலக்கு 2197-ம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என ஐ.நா.... மேலும் பார்க்க

`திமுக-வைத்தான் சொன்னேன், தேமுதிகவை அல்ல!’ - பிரேமலதா விஜயகாந்துக்கு திருமாவளவன் பதில்

வி.சி.க தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு... மேலும் பார்க்க

'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்கு ராகுல் ஆதரவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்... மேலும் பார்க்க