செய்திகள் :

`அது மட்டும் துரை வைகோ காதுக்கு போயிடுச்சுன்னா, நெற்றிக் கண்ணைத் திறந்து.!" - மல்லை சத்யா பேட்டி

post image

மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "I ignore him" என்று கோபமாக அதைக் கடந்துசென்றது நினைவிருக்கலாம்.

திமுக கூட்டணியை ஆதரிப்பதென்றால் வைகோவின் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்வீர்களா, உங்கள் ஆதரவுக்கு மதிமுக தரப்பிலிருந்து ஏதாவது எதிர்வினை வந்ததா என மல்லை சத்யாவையே தொடர்புகொண்டு கேட்டோம்.

வைகோ - மதிமுக
வைகோ - மதிமுக

"அண்ணன் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். காரணம், கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆட்சியில் பெண்கள் அடைந்த பலன்கள் நிறைய இருக்கின்றன. மத்திய அரசின் ஆதரவு இல்லாமலேயே ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதாலேயே ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் எங்கள் கட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைத்து ஆதரவைத் தெரிவித்தோம்.

ஆனால் வைகோ அவர்களின் கூட்டணியில் திமுக இருப்பதால், எங்கள் ஆதரவை பகிரங்கமாக அறிவிப்பதில் திமுக தரப்பில் தயக்கமோ சங்கடமோ இருக்கலாம். அது இயல்பானதுதான். அதற்காக நாங்களும் வருத்தப்படவில்லை.

இந்தப் பக்கம், மதிமுகவிலிருந்து வெளியேறி அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் ஒரு அணிக்கே ஆதரவு தர வேண்டுமா என்று எங்கள் தோழர்களும் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதில் எனக்கிருக்கும் அதே கருத்துதான் இருக்கிறது.

ஸ்டாலின்
திமுக | ஸ்டாலின்

அதனால எங்க நிலைப்பாடை நாங்க தெளிவாக சொல்லிட்டோம்.

234 தொகுதிகளுக்கும் எங்க தோழர்கள் பிரசாரத்துக்குப் போறாங்க. எங்க கட்சிக் கொடியை மட்டும் கட்டிட்டுப் போவாங்க. திமுக அணிக்கு ஓட்டு போடுங்கனு கேட்டுப் பிரசாரம் செய்வாங்க.

என்னைப் பொறுத்தவரை எங்க கட்சி சார்பா யாரும் போட்டியிடாததால் கூட்டணித் தலைவர்களுடன் சேர்ந்து மேடையேற வேண்டிய அவசியம் இல்லை.

பிரச்சாரம் செய்யலாம்னு இருக்கேன். எந்தெந்த தொகுதிகளுக்குப் போகலாம்னு இனிமேதான் முடிவு செய்யணும். எல்லாத் தொகுதிகளுக்கும் போக முடியாட்டியும் முக்கியமான இடங்களில் பிரச்சாரம் செய்வேன். ஆனா மதிமுக உறுப்பினர்கள் போட்டியிடுகிற தொகுதிகளுக்குப் போகிற ஐடியா இல்லை’’ என்றவரிடம்,

மல்லை சத்யா
மல்லை சத்யா

``தி.வெ.க ஆதரவு தந்தது தொடர்பாக மதிமுக தரப்பிலிருந்து யாராவது தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்களா?" என்றதும், மனிதர் உஷ்ணமாகி விட்டார்..

``ஒரு பண்போட அப்படி யாராவது எங்களை தொடர்பு கொண்டு பேசி, அது துரை காதுக்கு போயிடுச்சுன்னா அடுத்த அந்த நபர் அந்தக் கட்சியில இருக்க முடியுமா என்ன? நெற்றிக் கண்ணைத் திறந்து எரிச்சிடுவார் அவங்களை. இன்னைக்கு கட்சி நிலைமையைப் பாருங்க, தனிச்சின்னத்துல போட்டி போடுறோம்னு ஒரு இடத்தை வாங்கிட்டு கடைசியில அதுலயும் உதயசூரியன்லயே போட்டியிடுறோம்னு சொல்லியிருக்காங்க.

கட்சியை கெடுத்து நாசம் பண்ணிட்டார் வைகோவின் மகன். என் மகன் தான் அடுத்த தலைவர், நீ கொஞ்சம் விலகிப் போயிடுனு எங்கிட்ட நேரடியாக் கூப்பிட்டுச் சொல்லியிருந்தாக் கூடா பேசாமப் போயிருப்பேன். ஆனா துரோகி பட்டம் தந்ததாலேயே இன்னைக்கு திவெக-கிற ஒரு கட்சி உதிக்க வேண்டிய அவசியம் உண்டாச்சு. அப்படிப்பட்ட நபர்கள்கிட்ட இருந்து ஒரு நன்றி வரும்னா நான் எதிர்பார்ப்பேன். எங்க ஆதரவை அவங்க ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டாலும் எடுத்துக்காம போனாலும் எங்களுக்கு அதுபத்தி கவலை இல்லை. நாங்க ஆதரவு தெரிவிக்கிறது திமுக மீண்டும் ஆட்சிக்கு வரணும்னு மட்டுமே’’ என்கிறார் மல்லை சத்யா.   

விசிக மா.செ அவமதிப்பு? பிரபல ரௌடியுடன் தேர்தல் வேலை! - அடுத்தடுத்த சர்ச்சைகளில் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! - வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்!

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம்... மேலும் பார்க்க

கூட்டணியில் அழுத்தம் கொடுத்து தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் - வேட்பாளர் பட்டியல் வெளியாவது எப்போது?

தமிழக சட்டபேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எண்ணிப்பார்த்தால் இன்னும் 20 நாட்களே உள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி போன்ற பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' - அச்சுறுத்தும் பாலம்... மக்களின் திக்... திக் பயணம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வூரையும் இலுப்பூரையும் இணைப்பதற்கு 90-களில் வீரசோழ... மேலும் பார்க்க