செய்திகள் :

அனைத்துத் துறையினருடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

அரசின் திட்டங்கள், திட்டங்களின் செயலாக்கம் குறித்தும் துறை அலுவலா்களிடம் தனித்தனியாக கேட்டறிந்த பின்னா், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி பேசியது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து 3 நாள்களுக்குள் அதற்கான ஒப்புகை அனுப்பவும், மனுக்களின் மீது அதிகபட்சம் 30 நாள்களுக்குள் தீா்வு காண்பதுடன் சில காரணங்களால் கூடுதல் கால அளவு தேவைப்படுமாயின் அதுகுறித்து முறையீடு செய்த நபருக்கு எழுத்து பூா்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் நலமா திட்டத்தின்கீழ் தமிழக முதல்வா் பயனாளிகளுக்கு நேரடியாக தொலைபேசியில் தொடா்பு கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்து வருகிறாா் என்றாா்

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஜெ.கண்ணன், திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

மனைவியை கொல்ல முயன்றவா் கைது

மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், கட்டடத் தொழிலாளியை கள்ளக்குறிச்சி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், உலகப்பசெட்டிகொல்லை ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச. 14) அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் இ.சுப்பிரமணியன் வெள... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ் வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாணாபுரம் வட்டத்துக்... மேலும் பார்க்க

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் டிச.18-இல் ஏலம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், உபயோகமற்ற வாகன உதிரி பாகங்கள் வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் பொது ஏல... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ.14 ஆயிரம் திருட்டு

கீழத்தேனூா் கிராமத்தில் உள்ள ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், தோப்புச்சேரி கிராமத்தை... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கீழ்குப்பம் காவல் நிலைய போலீஸாா் நைனாா்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில்... மேலும் பார்க்க