செய்திகள் :

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்... 'திருத்திய' போலீஸ்!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும்  முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீஸார் தேடிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில்  நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பேசிய வாலிபர் ஒருவர், "காய்ஸ் நாம மாவட்ட எஸ்.பி ஆபீஸுக்கு உள்ளேபோய், வண்டியை திருகி வீடியோ போடப்போறோம். முடிந்தால் போலீஸ்காரன் (அச்சில் ஏற்றமுடியாத வார்த்தை) தூக்குறானா பாப்போம். அதனால இந்த வீடியோவை ட்ரென்ட் பண்ணி விடுங்க" என பேசியிருந்தார். போலீஸ் எஸ்.பி அலுவகத்துக்கே போய் ரீல்ஸ் எடுப்போம் எனவும், முடிந்தால் காவல்துறையினர் தங்களை கைது செய்து பார்க்கட்டும் என்ற ரீதியில் வாலிபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் வினீத்(22) என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் வெளியிட்ட வீடியோவில், "நாங்கள் எஸ்.பி ஆப்பீஸின் முன்னால் பைக்கில் சென்று சாகசத்தில் ஈடுபடுவோம் என ரீல்ஸ் வெளியிட்டோம். இதை சோசியல் மீடியாவில் பார்த்து போலீஸார் எங்களை அழைத்து அறிவுரை தந்தார்கள். நாங்கள் இதுபோன்ற தப்பை பண்ணமாட்டோம். நீங்களும் யாரும் அதுபோன்று செய்யவேண்டாம். டிராபிக் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க" என அந்த வாலிபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

போலீஸ் அறிவுரை சொன்னபிறகு வீடியோ வெளியிட்ட வினீத்

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வரப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 80 தற்காலிக சோதனைச்சாவடிகள், சுமார் 54 நான்கு சக்கர ரோந்துகள், 27 இருசக்கர வாகன ரோந்து அமைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின்

கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இசை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக சமூகவலைதளங்களில் பதிவு செய்பவர்கள் கண்காணிக்கப்படுவர். இருசக்கர வாகன சாகசங்கள் தொடர்பாக பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம். 18 வயதிற்க்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு 160 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் ANPR கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.கோவைகடந்த டிசம்பர் 15-ம... மேலும் பார்க்க

திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம்; "போதை அல்ல; மனநலம் பாதிக்கப்பட்டவர்" - ஆணையர்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர்.இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக... மேலும் பார்க்க

திருத்தணி: ஒடிசா இளைஞர் தாக்குதல் சம்பவம்; "தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு" - திருமாவளவன் கண்டனம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய... மேலும் பார்க்க

திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்... மேலும் பார்க்க

பார்சலில் வந்த தாலி; ஏற்காட்டில் இளம்பெண்ணை கொன்று வீசிய இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம். இவரது மனைவி சுமதி (25). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ள... மேலும் பார்க்க

வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. `இதுபற்ற... மேலும் பார்க்க