கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' - ஜூலை டூ டிசம்ப...
திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம்; "போதை அல்ல; மனநலம் பாதிக்கப்பட்டவர்" - ஆணையர்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராமகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவலர் ராமகிருஷ்ணன் மர்ம நபரை விரட்ட முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்நபர் தான் வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்க முயன்றுள்ளார். காவலர் ராமகிருஷ்ணன் தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி சுழற்றியபடி தற்காப்புக்காக அந்நபரிடம் தப்ப முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சத்தமிடவே அருகில் பணியிலிருந்த காவலர்கள் அந்த மர்ம நபரிடம் பேச்சு கொடுத்து அவரை மடக்கிப் பிடித்தனர். இதில் அந்த நபர் போதையிலிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அந்நபரை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் பொதுமக்களை ஆபாசமாகப் பேசிய நபரைத் தடுக்க முயன்றபோது கத்தியை வைத்து காவலரைத் தாக்க முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்போல தெரிவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2020-இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வாகனத்தைச் சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். அவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்துள்ளது. பழைய வழக்கை வைத்தே இந்தத் தகவலைப் பெற்றோம். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
கோயில் திருவிழாவின்போது, காவலர் ஒருவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




.jpeg)













