"ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!"- இயக்க...
திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்
திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர்.
இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
“டிசம்பர் 27 ஆம் தேதி திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் அவர்.
சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.28) கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் இருக்கிறார். சொந்த ஊருக்கு செல்லும் போது தாக்குதல் நடந்துள்ளது. சிறுவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டாக்கத்தியால் தாக்கி அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிறுவர்கள் மீது அதிகபட்ச தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் இருந்த 4 சிறுவர்களில் 3 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை நீதிபதியின் அறிவுரைப்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா கடந்த 6 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. 10 மாத்திரை பிடிபட்டாலும் மெயின் சப்ளையரை தேடி செல்வோம்.
போதைப்பொருள் பயன்படுத்துவதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ்களை கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.


















