செய்திகள் :

2026 பிறக்கப் போகுது... இன்னும் எத்தனை வருஷம் இதே பயத்தோட ஓடப் போறீங்க?

post image

2025 முடியப் போகுது. ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க. "நான் சம்பாதிக்கிறேன், உழைக்கிறேன். ஆனா, விலைவாசி ஏறுகிற வேகத்துக்கு என் சேமிப்பு ஏறமாட்டேங்குதே! என் பிள்ளைகளோட எதிர்காலம் என்னாகும்?" – இந்தக் கேள்வி உங்களுக்குள்ள குடைஞ்சுக்கிட்டே இருக்கா?

நீங்க மட்டும் இல்ல. இந்தியா முழுக்க 60% நடுத்தர வர்க்கத்தினர் இதே பயத்துலதான் இருக்காங்க. "சேமிப்பு கரையுது... செலவு பெருகுது!"

ஏன் இந்த அழுத்தம்? ஓர் அதிர்ச்சியான உண்மை!

உங்க பயத்துக்குக் காரணம், நீங்க இன்னும் பழைய காலத்து முதலீட்டு முறையிலேயே (வெறும் பேங்க் அக்கவுண்ட், நகை, பாலிசி) சிக்கிக்கிட்டு இருக்கிறதுதான்.

ஒரு சின்ன கணக்கைப் பாருங்க... இதயமே நின்றுவிடும்!

சும்மா ₹10,000 போட வேண்டிய இடத்துல போடாம விட்டா என்ன ஆகும்?

ராஜா (வயது 30): "இன்னைக்கே ஆரம்பிப்போம்"னு முடிவு எடுத்து, மாதம் ₹10,000 SIP போடுறார். (12% வளர்ச்சி). 60 வயசுல அவருக்குக் கிடைப்பது: ₹3.0 கோடி.

விமல் (வயது 40): "இன்னும் டைம் இருக்கு, அப்புறம் பார்த்துக்கலாம்"னு 10 வருஷம் தள்ளிப்போட்டு, அதே ₹10,000 போடுறார். 60 வயசுல அவருக்குக் கிடைப்பது: வெறும் ₹91 லட்சம்.

இழப்பு: வெறும் 10 வருஷத் தாமதத்துக்கு, விமல் இழந்தது கிட்டத்தட்ட ₹2.1 கோடி!

யோசிச்சுப் பாருங்க... அந்த ₹2.1 கோடி இருந்திருந்தா, விமலோட ஓய்வுக்காலம் எவ்வளவு சொகுசா, யாரு கையையும் எதிர்பார்க்காம இருந்திருக்கும்?

Investment (Representational Image)

ஆனா, பயப்பட வேண்டாம்! இன்னும் வாய்ப்பு இருக்கு.

AMFI-ன் லேட்டஸ்ட் டிசம்பர் 2025 கணக்குப்படி, இந்தியாவில் SIP முதலீடு மாதம் ₹2.4 லட்சம் கோடியைத் தாண்டிருச்சு. மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க, பணவீக்கத்தை ஜெயிக்க மியூச்சுவல் ஃபண்ட் ஒண்ணுதான் சரியான வழி!

உங்களுக்கான ஒரு குட்டி டிப்ஸ் (இப்போவே செய்யுங்க):
"எவ்வளவு முதலீடு செய்வது?"னு குழப்பமா இருக்கா?
சிம்பிளா ஒரு ஃபார்முலா இருக்கு: 50-30-20 விதி.

சம்பளத்துல 50% - வீட்டுச் செலவு, வாடகைக்கு.

30% - உங்க ஆசைகளுக்கு (டூர், புது போன்).

20% - கண்ணை மூடிக்கிட்டு முதலீட்டுக்கு.

இன்னைக்கே உங்க பேங்க் ஆப்ல ஒரு 'ஆட்டோ டெபிட்' செட் பண்ணுங்க. அந்த 20% பணம், 2030-ல் உங்களைக் காப்பாத்தும்.

ஏற்கனவே முதலீடு பண்றவரா நீங்க? (கொஞ்சம் உஷார்!)

"நான் தான் SIP போடுறேனே"னு நிம்மதியாக இருக்காதீங்க. போன வருஷம் மார்க்கெட் உச்சத்தில இருந்தப்போ, உங்க முதலீட்டை 'மறுசமன்பாடு' பண்ணீங்களா? செய்யலைன்னா, சந்தை கொஞ்சம் சறுக்கினாலும் உங்க லாபம் கரைஞ்சு போயிடும். இதைத் தவிர்க்க, 'ஹைபிரிட் ஃபண்ட்ஸ்' அல்லது 'அசெட் அலோகேஷன்' உத்திகளைப் பயன்படுத்தணும்.

2026-ல் உங்களுக்கான முழுமையான தீர்வு!

இந்த டிப்ஸ் எல்லாம் ஆரம்பம்தான். உங்க பயத்தைப் போக்கி, முழுமையான நிம்மதியைத் தேட ஒரே வழி 'திட்டமிட்ட முதலீடு'.

எஸ்.ஐ.பி டாப் அப்: ஒவ்வொரு வருஷமும் முதலீட்டை 10% ஏத்துனா, கோடீஸ்வரன் ஆவது ஈசி... அது எப்படி?

டாக்ஸ் ஹார்வெஸ்ட்டிங்: வரி போக மீதமுள்ள லாபத்தை எப்படி அதிகரிக்கிறது?

இலக்கு சார்ந்த முதலீடு: "இது பிள்ளையின் படிப்புக்கு... இது என் ஓய்வுக்கு"னு பிரிச்சு முதலீடு பண்றது எப்படி?

இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு ஒரு தெளிவு வேணுமா? வர்ற ஜனவரி 1, 2026 அன்னைக்கு விடை தெரிஞ்சிரும்!

Investment Workshop

சிறப்புப் பயிற்சிப் பட்டறை: உங்கள் நிதி இலக்குகளை அடையும் ஆண்டு - 2026!

இது சும்மா ஒரு கிளாஸ் இல்ல. உங்க பயத்தைப் போக்கி, ஒரு தெளிவான பாதையைக் காட்டுற 'Action Plan'.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் இந்த ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் என்ன கிடைக்கும்?

2026-க்கான பிரத்யேக முதலீட்டு வரைபடம் (Roadmap).

உங்க பழைய போர்ட்ஃபோலியோவை எப்படிச் சீரமைப்பது?

திரு. A. R. குமார் (முன்னாள் நாணயம் விகடன் ஆசிரியர்) அவர்களின் நேரடி வழிகாட்டல்.

தேதி: ஜனவரி 01, 2026 (வியாழக்கிழமை)

நேரம்: காலை 11:00 – 12:30 மணி (Zoom Online)

இடங்கள் குறைவு (இன்னும் 45 இடங்கள் மட்டுமே உள்ளன)!

இன்னும் யோசிச்சுக்கிட்டே இருந்தா, காலமும் போயிடும்... காசும் கரைஞ்சுடும். 2026-ஐ உங்க ஆண்டாக மாத்துங்க!

பெயரை முன்பதிவு செய்ய: https://forms.gle/eKWymqsTmFzoSyLY6

நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை' முடியுங்கள்

கடந்த செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையா? தாக்கல் செய்திருந்தும் ஏதேனும் தவறு இருக்கிறதா? நாளையே (டிசம்பர் 31) கடைசி தேதி. ஆம்... 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி ... மேலும் பார்க்க

ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆண்டு வெள்ளியின் விலை வழக்கத்தை விட மிக மிக அதிக வளர்ச்சியை அடைந்தது. சொல்லப்போனால், தங்கத்தை விட, அதிக வளர்ச்சியைக் கண்டது. இந்தச் சூழலில், நேற்று சர்வதேச சந்தையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது ... மேலும் பார்க்க

உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!

வழக்கத்தை விட, இந்த ஆண்டு தங்கம், வெள்ளி அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதுவும் வெள்ளியின் வளர்ச்சியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த ஆண்டு முதல் தேதியில் ஒரு கிராமுக்கு ரூ.98 என விற்பனை ஆன வெள்... மேலும் பார்க்க

கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%' ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே!

இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம்.தேவையைத் த... மேலும் பார்க்க

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம்.புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், "இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மா... மேலும் பார்க்க

என் சம்பளம் குடும்பத்துக்கு... என் எதிர்காலத்துக்கு நான் என்ன சேர்த்து வைத்திருக்கிறேன்?

காலை எட்டு மணி. சமையலறையில் குக்கர் விசிலடிக்கும் சத்தம். ஒரு கையில் காபி, மறு கையில் லேப்டாப் பேக். அவசரமாகப் பிள்ளைக்கு டிபன் பாக்ஸை மூடிவிட்டு, ஆட்டோவைப் பிடிக்க ஓடும் அந்தப் பெண்ணை நமக்குத் தெரிந்... மேலும் பார்க்க