பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தமா? - மணமகள் யார் தெரியுமா?
BB Tamil 9: "பிரேக் ஆயிருக்கேன்; உடனே கடந்துபோக முடியாது"- கம்ருதீனால் பார்வதி எமோஷனல்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர்.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.

இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கம்ருதீனும், பார்வதியும் மோதிக்கொண்டார்கள்.
கம்ருதீன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் பார்வதி கதறி அழுதார். ப்ரீஸ் டாஸ்க் (ஃபேமிலி டாஸ்க்) முடிந்ததில் இருந்தே கம்ருதீன் பார்வதி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி கம்ருதீன் குறித்து விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
"நான் டாஸ்க் பண்றேன். எல்லா விஷயங்களையும் பண்றேன். ஆனா நான் ஒரு மாதிரி பிரேக் ஆயிருக்கேன்.

என்னால உடனேலாம் கடந்துபோயிட முடியாது. அவனோட ஓட்டு பாதிக்கும்'னு சொல்லும்போது தான் இன்னும் கோவம் வருது.
அவன் பண்றது எல்லாமே ஒரு லவ் கேம்தான். அதுக்கு பயன்படுத்தப்பட்ட பகடைக்காய் தான் நானா? "என்று எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கிறார்.


















