ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி
BB Tamil 9: "இது ரொம்ப Cheap-ஆ இருக்கு" - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர்.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கால் மோதல் நடக்கிறது.
"நீ யாரு என் மேல கை வைக்க. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும். இல்லன்னா விட மாட்டேன்" எனக் கம்ருதீன், பார்வதியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார்.
"நீ மட்டும் என் மேல கை வைக்கலையா? இது ரொம்ப சீப்பா இருக்கு கம்ருதீன். உன்கிட்ட மன்னிப்புலாம் கேட்க முடியாது. நான் என்ன பண்னேன்" எனப் பார்வதி அழுகிறார்.


















