Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" - சிவகார்த்திகேய...
நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை' முடியுங்கள்
கடந்த செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையா? தாக்கல் செய்திருந்தும் ஏதேனும் தவறு இருக்கிறதா? நாளையே (டிசம்பர் 31) கடைசி தேதி.
ஆம்... 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய மிஸ் செய்திருந்தாலோ, அதை இப்போது செய்யலாம். ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பதில் தவறு ஏதேனும் இருந்தால், இப்போது திருத்திக் கொள்ளலாம்.
நாளையும் தவறவிட்டுவிட்டால், இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கலை இனி செய்யவே முடியாது.

நாளைக்குப் பிறகு...
வரும் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு, அப்டேட்டட் வருமான வரி கணக்குத் தாக்கலைத் தான் செய்ய முடியும்.
தாக்கல் செய்ய தாமதத்திற்கு ஏற்றவாறு மொத்த வரிக்கு 25 சதவிகிதம், 50 சதவிகிதம், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் அதிக வரி வசூலிக்கப்படும்.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு அபராதம் இல்லை. ஆனால், தாமதமாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும்.
ரீஃபண்ட் வரவில்லையா?
இன்னும் நிறைய பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவில்லை. வருமான வரி கணக்குத் தாக்கலின் போது, அவர்கள் நிரப்பாமல் விட்டவைகளும், தவறாக நிரப்பப்பட்டவைகளும் தான் இதற்கு காரணம்.
அதனால், அவர்கள் இன்றே ரீஃபண்ட் ஏன் இன்னும் வரவில்லை என்பதை செக் செய்து, அதை இன்றோ, நாளையோ சரி செய்துவிடுவது நல்லது.
நாளை தான் கடைசி நாள் என்று நாளை வரை காத்திருக்காமல், இன்றே வேலையை முடித்துவிடுங்கள். கடைசி நாள் என்பதால் வலைதளம் பிஸி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.




















