செய்திகள் :

BB Tamil 9: ``வன்மம் வீழ்த்தப்பட்டது" - பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது.

கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர்.

இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக்கிறார்.

 BB Tamil 9
BB Tamil 9

அந்த அறிவிப்பில், நடுவில் இருக்கும் பெட்டியில் பந்துகள் இருக்கும். அதில் வெள்ளைப் பந்துகள், கருப்புப் பந்துகள் இரண்டு கோல்டன் நிறப் பந்துகள் இருக்கும். எடுக்கும் பந்தை மாற்றக்கூடாது. போட்டியாளர்கள் மற்றவர் எடுக்கும் பந்துகளின் பாஸ்கெட்டிலிருந்து பந்துகளை எடுக்கலாம்.

இறுதி பஸ்ஸர் அடிக்கும்போது உங்களிடம் கருப்புப் பந்து இருந்தால் அவுட். ஒவ்வொரு போட்டியாளரும் ஆக்ரோஷமாக விளையாடும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.

பார்வதி, வினோத் பாஸ்கெட்டிலிருந்து பந்தை எடுக்க முயல்கிறார். திவ்யா பந்துகளைப் பிடிங்கிச் செல்லும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இறுதியில் பார்வதி, கமருதீனிடம், ``கேவலமா இருக்கு உன் கேம்... நீ ரொம்ப நல்லவனோ... நீ என்ன ஹீரோவா நான்தான் வில்லியா" எனச் சண்டையிடுகிறார்.

கமருதீன் சிரித்துக்கொண்டே, "வன்மம் வீழ்த்தப்பட்டது எனப் பேசுகிறார். டிக்கெட் டூ ஃபினாலே பிக்பாஸ் நிகழ்ச்சியும் முக்கியமான அம்சம் என்பதால் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள் என்பது இன்று நிகழ்ச்சியில் தெரியவரும்.

Serial Rewind 2025: சர்ச்சை கிளப்பிய 'இவருக்குப் பதில் இவர்', சங்கத்தை உடைத்த ஆளுங்கட்சி?

2025ல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.ஒரே இழுவை.. ஓஹோனு வாழ்க்கை!படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சொந்த ஊரில் இருக்கும் அணைக... மேலும் பார்க்க

உயிரை மாய்த்துக்கொண்ட சீரியல் நடிகை நந்தினி; டபுள் ரோலில் நடித்தவர் சோக முடிவை தேடியது ஏன்?

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார்.கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இர... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனில் நடந்தது என்ன?

அமித், கனி போன்ற நல்ல போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாரு, சான்ட்ரா, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்கள் ஆட்டத்தில் இன்னமும் நீடிக்கிறார்கள்.ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ்... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது"- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. BB Ta... மேலும் பார்க்க

BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" - திவ்யாவைக் கடுமையாகச் சாடிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நட... மேலும் பார்க்க