இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந...
உயிரை மாய்த்துக்கொண்ட சீரியல் நடிகை நந்தினி; டபுள் ரோலில் நடித்தவர் சோக முடிவை தேடியது ஏன்?
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி.
பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்திருந்தவர், கௌரி தொடர் மூலம் தமிழுக்கு வந்தார்.
இந்த சீரியலில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த சீரியலின் ஷூட்டிங் முழுக்க ஆரம்பத்தில் பெங்களூருவிலேயே நடந்து வந்தது.
எனவே பெங்களூருவில் வசித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றினார்களாம்.
எனவே கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தற்போது பிரேக் என்பதால் பெங்களூருவுக்குத் திரும்பினாராம்.
இந்நிலையில் நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
கௌரி தொடரில் நடித்து வரும் சதீஷிடம் நாம் பேசினோம்.
''கலகலப்பா பேசிட்டிருக்கிற பொண்ணு. சில தினங்களுக்கு முன்னாடிகூட ஷூட்டிங் வந்துச்சு. டபுள் ரோல்.. உற்சாகமாகத்தான் நடிச்சிட்டிருந்தாங்க. சின்னப் பொண்ணு. இன்னும் கல்யாணம் ஆகல. என்ன பிரச்னைனு தெரியல. மனசுல ஏதாவது கஷ்டம் இருந்தாகூட இருக்கிற சக நடிகர்கள்கிட்ட பேசியிருக்கலாம். ஆனா இப்படியொரு முடிவை எடுத்திருக்கு. யூனிட்ல எல்லாருக்குமே பெரிய ஷாக்.
சக ஆர்ட்டிஸ்ட் சிலர் பெங்களூரு போயிருக்காங்க'' என்றார் அவர்.

















