இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந...
பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1.50 லட்சம் மகளிர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெண்கள் கூட்டத்தை திரட்டும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் உடையில் வர உத்தரவிடப்பட்டுள்ளது. 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கருப்பு – சிவப்பு நிறத்தில் சுடிதாரும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதே நிறத்தில் சேலையும் கொடுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் கரூர் டீம் சார்பில், கோவையில் கடந்த வாரமே மாநாட்டில் கலந்துகொள்ளும் மகளிருக்கான உடைகளை விநியோகித்துவிட்டனர். கறுப்பு, சிவப்பு நிற புடவைகள் மற்றும் சுடிதார் அணிந்து மாநாட்டில் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

மாநாட்டில் அவர்களுக்கு ஸ்நாக்ஸ், தண்ணீர், பழச்சாறு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றுடன் பணமும் கொடுக்கப்படவிருப்பதாகச் சொல்கிறார்கள்.















