BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனி...
பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?
'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவரது வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக ஊட்டியில் பெண் ஒருவரைப் பிடித்து கூட்டம் முடியும் வரை ஆம்புலன்ஸில் அடைத்து வந்திருக்கிறது காவல்துறை.

இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினோம், "என் பெயர் வைஷாலி பா.ஜ.க - வின் நீண்டகால பெண் நிர்வாகியாக இருந்துவந்தேன். இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற முக்கிய பதவிகளை வகித்து களத்தில் வேலை செய்துவந்தேன். அண்ணாமலை நற்பணி மன்றத்தில் இணைந்து மாநில அளவில் பொறுப்பைப் பெற்றேன்.
இதனால் கோபமடைந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், நான் வகித்து வந்த விவசாய அணித் தலைவர் பதவியைப் பறித்து என்னை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்கள். எனக்கு நடந்த இந்த அநீதி குறித்து மாநிலத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கான்வாயின் போது நயினார் வாகனத்தின் அருகில் சென்றேன்.

கறுப்புக் கொடி காட்டினேன், மறியலில் ஈடுபட்டேன் எனக் காவலர்கள் என்னை நெருக்கி மயக்கமடையச் செய்து ஆம்புலன்ஸில் அடைத்து வைத்துவிட்டார்கள். கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்பியதுமே விடுவித்தார்கள். நான் பா.ஜ.க-வுக்கு எதிரி கிடையாது" என்றார்.
















