"என் அரசியல் ஒதுக்கிவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்றால், எனக்கு உடன்பாடி...
ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!
200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூர்வீக சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். கண்மூடித்தனமான காடழிப்பு மற்றும் வனவிலங்கு வேட்டையின் காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய வன பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. அதேவேளையில் வனவிலங்குகளின் வாழிட, வழித்தட சிதைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள நுந்தளா பகுதியில் யானை ஒன்று நடமாடி வருவதை மக்கள் நேற்று கண்டுள்ளனர். யானை நடமாட்டம் குறித்த கடந்த 200 ஆண்டு தரவுகளின் படி இந்த பகுதிக்கு யானை வந்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது குறித்து கிராம மக்கள், " பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். சுற்றிலும் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்கள் உள்ளன. காட்டு மாடுகளின் நடமாட்டம் தான் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது முதல் முறையாக ஆண் யானை ஒன்று வந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு இதற்கு முன்பாக யானை வந்ததாக முன்னோர்கள் சொன்னதாக கேள்விப்பட்டதில்லை" என்றனர்.




















