செய்திகள் :

ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!

post image

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் பதிலாக 10.40 மணிக்குப் புறப்படும்.

  • எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்குப் புறப்படும்.

  • எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்குப் புறப்படும்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்
  • சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்குப் புறப்படும்.

  • எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்குப் புறப்படும்.

  • எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும்.

  • எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்குப் புறப்படும்.

  • எழும்பூரில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்குப் புறப்படும்.

  • எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை.

  • நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 8.50-க்குப் புறப்படும்.

  • சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும்.

  • செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும்.

சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்
  • ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்குப் புறப்படும்.

  • தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குப் புறப்படும்.

  • இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாகப் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.

  • மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தேனியில் மலை போல் சேரும் குப்பைகள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

தேனி, அல்லிநகரம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாகவே மாறி உள்ளது.அல்லிநகரத்திற்கு அருகில் பாரஸ்ட் ரோட் பகுதியில் ஒரு சிறிய குன்று உள்ளது, அ... மேலும் பார்க்க

SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!

தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முதல் கட்டம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர் ந... மேலும் பார்க்க

'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!

உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இர... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை. ஏன்... என்ன காரணம்? இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங... மேலும் பார்க்க

மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்!

மும்பையில் ஏற்கனவே இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், விமானப் போக்குவரத்து நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து மும்பை அருகில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட மு... மேலும் பார்க்க

ஏறுமுகத்தில் தொழில்துறை... இறங்குமுகத்தில் விவசாயம்... கவனம் செலுத்துவாரா முதல்வர்?

அனைவருக்கும் பசுமை வணக்கம்.‘தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.52,831.20 கோடி; 2024-25-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 51,862.76 கோடி’ என்று இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவர... மேலும் பார்க்க