செய்திகள் :

”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

post image

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், டெலிகிராம் செயலியில் இணையுமாறும் கூறப்பட்டுள்ளது. டெலிகிராமில் அவரைத் தொடர்புகொண்ட மோசடி கும்பல், கூகுள் மேப்பில் ஹோட்டல்களுக்கு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ கொடுப்பதுதான் வேலை எனக்கூறியுள்ளார். முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ரூ.10, ரூ.20, ரூ.40 என சிறிய தொகையை அபிநயாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

பின்னர், ”ப்ரீபெய்ட் டாஸ்க்” எனக்கூறிக் கொண்டு, பார்ட் டைம் வேலைகளை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை காட்டியுள்ளனர். இதை நம்பிய அபிநயா, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக பணம் அனுப்பியுள்ளனர். ஒரு கட்டத்தில், தான் கட்டிய பணத்தை அவர் எடுக்க முயன்றபோது ”உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிட்டது”, ”தவறான ஆப்ஷனை க்ளிக் செய்துள்ளீர்கள்”, ”அக்கவுண்ட் ஃப்ரிஷ் ஆகிவிட்டது” என பல காரணங்களைக் கூறி மீண்டும் மீண்டும் பணக் கட்டச் சொல்லியுள்ளனர்.

இவ்வாறு அபிநயா மொத்தம், ரூ.9,45,300 வரை பணம் செலுத்தி ஏமாந்துள்ளார். இதே போல, நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகிலுள்ள இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த சகாய அஸ்வினி, என்பவரிடமும் மோசடி நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியில் வெளிநாட்டு துணி நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இணைப்பில் சென்றபோது படங்களைப் பார்த்து ரிவ்யூ செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறியுள்ளனர். இதிலும் முதலில் ரூ.14,000 லாபம் போல் கொடுத்து நம்ப வைத்துள்ளனர்.

சைபர் கிரைம்

பின்னர், அடுத்தடுத்தகட்ட வேலைகளைப் பெற பணம் கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதை நம்பிய சகாய அஸ்வினி, தனது நகையை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய பிறகு ’தொகை போதவில்லை’, ‘ஆர்டர் போதவில்லை’ எனக்கூறி மொத்தம் ரூ.9,50,192 வரை பணம் பறித்துள்ளனர். கடைசியாக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.இதில் தனக்கு தொடர்பு இல்லை எ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ; வலுக்கும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் நான்கு சிறுவர்களால் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மத்தியப் பிரதேசத்த... மேலும் பார்க்க

மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இ... மேலும் பார்க்க

`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி... மேலும் பார்க்க

சென்னை: ஹவுஸ் ஓனரிடம் கைவரிசையைக் காட்டிய ஆட்டோ டிரைவர்; தோழியுடன் சிக்கியது எப்படி?

சென்னை, நெற்குன்றம், சக்தி நகர், 12-வது தெருவில் கார்த்திகேயன் (40) என்பவர் டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் 24.12.2025-ம் தேதி மாலை பீரோவில் வைத்திருந்த பணத்தை சரிபார்த்த ப... மேலும் பார்க்க