பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வா...
BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" - திவ்யாவைக் கடுமையாகச் சாடிய விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது.

இதில் திவ்யாவை விக்ரம் நாமினேட் செய்கிறார். "நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத ஒரு கோழை.
உங்க மேல வைக்கிற மாற்றுக் கருத்துக்களை ஏத்துக்காம இத்தனை வாரம் வந்ததுலாம் அயோக்கியத்தனம்.
நான்தான் இங்க நியாயம் கேட்கிறேன்னு சொல்லி ஒரு பொய்யான வேடமும், பொய்யான முகமூடியும் போட்டுகொள்கிற ஒரு ஃபிராட்" என்று திவ்யாவை விக்ரம் கடுமையாகச் சாடி நாமினேட் செய்திருக்கிறார்.




















