செய்திகள் :

Sirai: "நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்" - 'சிறை' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

post image

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.

சிறை படத்தில்...
சிறை படத்தில்...

'7 Screen Studio' லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் சங்கர் 'சிறை' படத்தைப் பாராட்டித் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "'சிறை' உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவற்றில் நடித்த நடிகர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.

விக்ரம் தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலித்தது.

இந்த அருமையான படத்தை நமக்கு வழங்கிய தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சிறை படத்தில்...
சிறை படத்தில்...

இயக்குநர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை ‘சிறை’ பிடித்துவிட்டார்.

இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும், இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது" என்று படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆக... மேலும் பார்க்க

"சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது"- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த... மேலும் பார்க்க

"தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது மோசமான ஆண்டு!" - எப்படி இருந்திருக்கிறது 2025 கோலிவுட்? | ஒரு பார்வை

ஆண்டின் இறுதி நாட்கள் வந்துவிட்டது! ஒவ்வொரு வருடமும், சினிமாவில் பல எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சற்று, இந்தாண்டின் சினிமாக்களையும் திரும்பிப் பார்த்தால், வருடந்தோறும் நிகழும் அத... மேலும் பார்க்க

"இந்த 28 வருடங்களில் நான் பார்த்த பொக்கிஷம் ரஞ்சித் தான்" - புகழ்ந்து பேசிய மிஷ்கின்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அந் தவகையில் நேற்று (டிச. 29) மிஷ்கின் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியில் க... மேலும் பார்க்க

"என் அரசியல் ஒதுக்கிவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்றால், எனக்கு உடன்பாடில்லை" - மாரி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு அவரது ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குந... மேலும் பார்க்க