செய்திகள் :

ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி

post image

'ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி.

செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எழுப்பிய முழுக்கங்கள் ஓவர் நைட்டில் வைரலாக, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகக் களம் கண்டார்

தொடர்ந்து விளம்பரப் படங்கள், சினிமா வாய்ப்புகள் என ரொம்பவே பிஸியானார்.

கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழலில் இம்மாதத்தின் முதல் வாரம் தன்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் வழியே தெரிவித்திருந்தார்.

பிக் பாஸ் ஜூலி
பிக் பாஸ் ஜூலி

தன் காதலரான முகமது ஜக்ரீம் என்பவரை ஜூலி மணம் முடிக்கப் போகிறார் என்கிற அந்தச் செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம்.

அப்போது திருமணத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார்.

தற்போது அந்த திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாராகி விட்டது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அழைப்பிதழ் வைக்கத் தொடங்கி விட்டாராம்.

வரும் ஜனவரி 16 வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் வைத்துத் திருமணம் நடைபெறவிருக்கிறது.

தொடர்ந்து அதே நாளில் இரவு 7 மணிக்கு மேல் வரவேற்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் பொங்கலுக்கு அடுத்த சில தினங்களில்தான் ஜல்லிக்கட்டு நடக்கும்.

ஜல்லிக்கட்டு மூலம் புகழடைந்த ஜூலிக்கு அப்படியொரு நாளிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்

தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பா... மேலும் பார்க்க

BB Tamil 9: "இது ரொம்ப Cheap-ஆ இருக்கு" - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி மு... மேலும் பார்க்க

BB Tamil 9: ``வன்மம் வீழ்த்தப்பட்டது" - பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக... மேலும் பார்க்க

Serial Rewind 2025: சர்ச்சை கிளப்பிய 'இவருக்குப் பதில் இவர்', சங்கத்தை உடைத்த ஆளுங்கட்சி?

2025ல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.ஒரே இழுவை.. ஓஹோனு வாழ்க்கை!படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சொந்த ஊரில் இருக்கும் அணைக... மேலும் பார்க்க

உயிரை மாய்த்துக்கொண்ட சீரியல் நடிகை நந்தினி; டபுள் ரோலில் நடித்தவர் சோக முடிவை தேடியது ஏன்?

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார்.கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இர... மேலும் பார்க்க