செய்திகள் :

குமரி: 2 மணி நேர போராட்டம்; வலியால் மயங்கிய சிறுவன்; கரும்பு மிஷினில் சிக்கிய சிறுவனின் கை மீட்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் போஸ். இவர் அந்தப் பகுதியில் கரும்புச்சாறுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

வில்லியம் போஸின் பேரன் ஆரின் ஜெஃப்ரின் (13) என்பவர் அவ்வப்போது கரும்புச்சாறுக் கடைக்குச் சென்று உதவுவது வழக்கம். நேற்று மாலை கடைக்குச் சென்ற ஜெஃப்ரினிடம் கரும்புச் சாறு இயந்திரத்தைச் சுத்தப்படுத்துமாறு வில்லியம் போஸ் கூறியுள்ளார்.

சிறுவன் ஆரின் ஜெஃப்ரின் கரும்புச்சாறு பிழியும் இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே அதைச் சுழற்றி சுத்தப்படுத்தியுள்ளார். அப்போது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல்கள் நசுங்கின. இயந்திரத்தில் சிக்கிய கையை வெளியே எடுக்க முடியாமல் வலியால் சிறுவன் அலறினான்.

அங்கிருந்த வில்லியம் போஸ் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தினார். பின்னர் சிறுவனின் கையை வெளியே எடுக்க முயன்றார். ஆனால், கரும்பில் இருந்து சாறு பிழியும் ரோளரில் சிறுவனின் கை விரல்கள் சிக்கிக் கொண்டதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. 

கறும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கை சிக்கிய சிறுவன் மீட்கப்பட்ட காட்சி

இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் கரும்புச்சாறு இயந்திரப் பாகங்களை கட்டிங் மிஷினால் வெட்டி அகற்றினர்.

பின்னர், சிறுவனின் கையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், இயந்திரத்தின் பாகங்களை கட்டிங் மிஷினால் வெட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

ரோளர்களையும் கழற்ற முடியாததால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேரம் செல்லச் செல்ல சிறுவனும் வலியால் துடித்து மயக்க நிலைக்குச் சென்றான். அந்தச் சிறுவனுக்கு பொதுமக்கள் பழச்சாறு கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றனர்.

அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டதுடன், வலி நிவாரண ஊசியும் செலுத்தப்பட்டது.

வலியால் துடித்த சிறுவன்
வலியால் துடித்த சிறுவன்

அடுத்தகட்டமாக, மெக்கானிக்கை வரவழைத்து கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தின் பாகங்களைக் கழற்றி அகற்றினர். மேலும், ரோளர்களைக் கழற்றி சிறுவனின் கையை வெளியே எடுத்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் வலியால் துடித்த அந்தச் சிறுவன் மீட்கப்பட்டு கை விரல்கள் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அவனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குளச்சல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை: பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது நடந்த கொடூரம்; பாதசாரிகள் மீது மோதி 4 பேர் பலி

மும்பையில் பி.இ.எஸ்.டி. (பெஸ்ட்) நிர்வாகம் மின் விநியோகம் மற்றும் பயணிகள் பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது. நேற்று இரவு 10.05 மணியளவில் பெஸ்ட் பஸ் ஒன்று பயணிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.... மேலும் பார்க்க

சிவகாசி: இடிந்து விழுந்த வீட்டின் கேட் சுவர்; விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொங்கல... மேலும் பார்க்க

சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்க... மேலும் பார்க்க

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர்திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

கர்நாடகா: பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியா... மேலும் பார்க்க

'நீர்தேக்கத் தொட்டியை இடித்தபோது, வீட்டில் இடிந்து விழுந்து விபத்து' - கரூர் அதிர்ச்சி சம்பவம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்தி கிராமம், அமர்ஜோதி மூன்றாவது தெருவில் அதிக கொள்ளளவு கொண்ட நீண்ட காலமாக பயனற்று கிடந்த நீர்த்தேக்கத் தொட்டியை நீக்கிவிட்டு, அங்கு அரசு சார்பாக புதிய கட்டடம் கட்ட... மேலும் பார்க்க