செய்திகள் :

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" - பராசக்தி குறித்து ரவி மோகன்

post image

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர்.

Parasakthi
Parasakthi

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர்.

தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தக் காணொளியைப் பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள்.

இக்காணொளியில் ரவி மோகன், "சுதா மேம் எனக்கு கால் பண்ணி 'இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு.

பிறகு, 'ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும்.

அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்'னு சுதா மேம் சொன்னாங்க.

என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க" என்றார்.

Atharvaa
Atharvaa

அதர்வா கூறுகையில், "எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது.

இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம்" எனப் பேசியிருக்கிறார்.

Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆக... மேலும் பார்க்க

"சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது"- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Sirai: "நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்" - 'சிறை' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர்... மேலும் பார்க்க

"தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது மோசமான ஆண்டு!" - எப்படி இருந்திருக்கிறது 2025 கோலிவுட்? | ஒரு பார்வை

ஆண்டின் இறுதி நாட்கள் வந்துவிட்டது! ஒவ்வொரு வருடமும், சினிமாவில் பல எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சற்று, இந்தாண்டின் சினிமாக்களையும் திரும்பிப் பார்த்தால், வருடந்தோறும் நிகழும் அத... மேலும் பார்க்க

"இந்த 28 வருடங்களில் நான் பார்த்த பொக்கிஷம் ரஞ்சித் தான்" - புகழ்ந்து பேசிய மிஷ்கின்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அந் தவகையில் நேற்று (டிச. 29) மிஷ்கின் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியில் க... மேலும் பார்க்க